Headlines

பூட்டான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

 இலங்கைக்கு வருகை தந்துள்ள  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே   இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி   மைததிரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்  பேரில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் நேற்றுக்காலை இலங்கை வந்தடைந்தார். காலை 10 மணியளவில்  கட்டுநாயக்க விமான  நிலையத்தை வந்தடைந்த   பூட்டான் பிரதமரை  வெளிவிவகார அமைச்சர்  மங்கள  சமரவீர வரவேற்றார். இன்றைய தினம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்…

Read More

காவத்தை பெண் கொலை.. மகனின் அதிர்ச்சி வாக்குமூலம். (காதலுக்காக தாயை கொன்று உடைகளின்றி வீசிய பாதகன்)

இரத்­தி­ன­புரி, கஹ­வத்தை – கொட்­ட­கெ­த­னவில் மர்­ம­மான முறையில் கடந்த சனி­யன்று நள்­ளி­ர­வுக்கு பின்னர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த 39 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயின் கொலை தொடர்பில் அவ­ரது 18 வய­து­டைய மகனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். காவத்தை – கொட்டகெத்தென்ன பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது….

Read More

இந்தியாவின் தேர்தல் ஆணையாளராக, செய்யது நசீம் அகம்மது சைதி நியமனம்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வரும் ஹரி சங்கர் பிரம்மா , வரும் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த பொறுப்பில் ஜனாதிபதி நியமித்துள்ள செய்யது நசீம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 1976 ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்….

Read More

வவுனியா அரபா மகாவித்தியாலயத்தின் இடம் பெற்ற விளையாட்டு போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் வவுனியா அரபா மகாவித்தியாலயத்தின் நேற்று (09) இடம் பெற்ற விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாகக் கலநதுகொண்டபோது.  

Read More

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது -அமைச்சர் றிஷாட்

சார்க் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும். இந்நிலையில் இலங்கை- பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையில் உள்ள இராஜதந்திர உறவுகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலுப்படுத்தும் விதமாகவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் அமைந்தது. . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 05ம் திகதி ஆரம்பித்தார். அவருடன் சென்றவர் என்றவகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இப்பயணம் குறித்து கொழும்பில் வைத்து…

Read More

ஒரு மணித்தியாலம் மட்டுமே உறங்குவேன்! சம்பள பணமும் வழங்கப்படுவதில்லை!- 18 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண் தெரிவிப்பு

பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த ஆர். பிரேமவதி என்னும் இலங்கை பணிப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பிரேமவதிக்கு 18 வருட காலத்திற்கும் கிடைக்க வேண்டிய சம்பள பணமாக 18 லட்சம் ரூபா காசோலையினை அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று வெளிநாட்டு…

Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய பிரிவுகளை நீக்கத் தயார்: அரசாங்கம்

19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். குழுநிலை விவாதத்தின் போது, அவற்றை அரசாங்கம் நீக்கிகொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்

Read More

’19ஆவது திருத்தத்தில் சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்’

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்தார்.

Read More

19ஆவது திருத்தம் 20ஆம் திகதி சமர்பிக்கப்படும்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More

யெமனிலிருந்து இலங்கையர்கள் மீட்டெடுப்பு!

யெமனில் உள்ள இலங்கையர்கள் 54 பேர் அரசாங்கத்தின் உதவியுடன் அங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். ​யெமனில் தற்போது கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் 3 இலங்கையர்கள் இந்தியாவுக்கும் 03 இலங்கையர்கள் இந்தோனேஷியாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 06 ஆம் திகதி ஏனைய 43 இலங்கையர்கள் சீன வாகனத்தின் உதவியுடன் டிஜிபௌரி இடத்திற்கும் மீட்டெடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் 5 இலங்கையர்கள் யெமனிலிருந்து ஓமானுக்கு சென்றனர்…

Read More

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இன்று முதல் இலவச Wi-Fi வசதி

அரசாங்கத்தின் இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இலவச Wi-Fi வசதி இன்று (09) பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கை தொலைதொடர்புகளை சீரமைக்கும் ஆணைக்குழுவின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 100 MB இணையதள வசதியை மாதாந்தம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

Read More

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல்…

Read More