விண்ணில் பாயத் தயாராகும் சீனாவின் லாங் மார்ச் 6
ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது சீனா. நிலவுக்குச் சென்று அங்கிருந்து திரும்புவம் விண்கலத்தை வடிவமைத்து வரும் சீனா, வரும் 2020-ம் ஆண்டுக்குள் தனது சொந்த ஆய்வகத்தை விண்வெளியில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக கூடுதல் எடை சுமந்து செல்லும் நவீன ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது. லாங் மார்ச் என்ற பெயரில் தொடர் ஏவுகலங்களை உருவாக்கி வரும் சீனா, இந்த ஆண்டு இறுதியில் லாங் மார்ச் 6 ஏவுகலத்தை விண்வெளியில் ஏவத் தயாராக உள்ளது….
