Headlines

யெமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி வான் தாக்குதல்!




யெமனின் ஈரானிய ஆதரவு ஹுதி கிளர்ச்சிப் படைக்கெதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

வளைகுடா கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஜோர்தான், மொரோக்கோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இத்தாக்குதலில் சவுதியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெமன் ஜனாதிபதிக்கெதிரான குறித்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கே சவுதி தலைமையிலான கூட்டணி பதிலடி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இது பிராந்திய ரீதியான யுத்தமாக மாறும் என ஹுதி அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் தலைநகரில் திடீர் தாக்குதலை நடாத்தியிருந்த கிளர்ச்சிப்படையிடம் அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிலேயே இவ் வான் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு இதில் குறித்த அமைப்பின் மூன்று முக்கியஸ்த்தர்கள் உட்பட பதினேழு பேர் உயிரழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *