Headlines

திங்கள் முதல் இலவச WI-FI அமுல்

எதிர்வரும் திங்கட்கிழமை மு தல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக நிறுவன பிரதானிகளை இன்று வியாழக்கிமை சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

Read More

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வோம் -அமைச்சர் றிஷாத்

இலங்­கைக்குக் கிடைக்­காமல் போன ஜீ.எஸ்.பி வரிச்சலு­கை­யினை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்­ள­வுள்­ள­தாக கைத்­தொழில், வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரிவித்தார். இந்தச் சலு­கை­யினை இலங்­கைக்கு பெற்றுக்கொடுப்­பது தொடர்பில் ஆராயும் உயர் ஐரோப்பிய ஒன்­றி­யத்தின் பிரதி நிதிகள் குழு­வினர் நேற்று அமைச்சர் றிஷாத் பதி­யு­தீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும், ஒன்­றி­யத்தின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னி­டத்தில் கருத்­து­ரைக்கும்…

Read More

பல்கலை மாணவர்கள் மீண்டும் போராட்டம்?

பாறுக் சிகான் யாழ் பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (26) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். முகங்களில் பல்வேறு வரைபடங்களை வரைந்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லைஇ ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லைஇ மற்றும் தமது…

Read More

உயர் கல்வி- ஆராய்ச்சி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தார் அமைச்சர் அமுனுகம

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று (25) அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் ஆராய்ச்சி மற்று அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர- மேலதிக செயலாளர் எஸ்.எச். ஹரிஸ்சந்திர- அமைச்சின் ஆலோசகர் தாரா விஜயதிலக்க- இலங்கை நெனோ…

Read More

கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை  செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. எவன்கார்ட் வழக்கு தொடர்பிலேயே காலி நீதிமன்றம் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யெமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி வான் தாக்குதல்!

யெமனின் ஈரானிய ஆதரவு ஹுதி கிளர்ச்சிப் படைக்கெதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. வளைகுடா கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஜோர்தான், மொரோக்கோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இத்தாக்குதலில் சவுதியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெமன் ஜனாதிபதிக்கெதிரான குறித்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கே சவுதி தலைமையிலான கூட்டணி பதிலடி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இது பிராந்திய ரீதியான யுத்தமாக மாறும் என ஹுதி அமைப்பு…

Read More

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்; ஆயிரம் ரூபா கட்டணம்

– வி.தபேந்திரன் – அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, திருமணப் பதிவு…

Read More

19ஆவது திருத்தத்தை எதிர்த்து 3 மனுக்கள் தாக்கல்

– லக்மால் சூரியகொட – அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான திருத்த சட்டமூலம்; விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா ஆகியோரை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் என்பன திருத்தப்படவுள்ள இந்த 19ஆவது திருத்தத்துக்கு…

Read More

‘ஜேர்மன்விங்கஸ்’ விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

விபத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு விமானத்தின் குரல் பதிவு பெட்டியில் இருந்து பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து தெரிய வந்ததாகக் கூறப்படும் சில முக்கிய விடயங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானம் பிரான்சில் விபத்துக்குள்ளான நாளில் வானிலை சீராகவே இருந்தது. இதனால் விபத்துக்கான பிரதான காரணி வானிலையாக இருக்க முடியாது என்பது ஓரளவுக்கு உறுதியாகியது. மேலும் வேறு  எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்றா என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இந்நிலையில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட்…

எம்.எம்.ஜபீர் பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களினால்; கொழுபிலுள்ள அமைச்சரின் அலுவலத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (25) நியமனம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும்…

Read More

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்

தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்த புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இந்த தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்…

Read More

தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க கோத்தபாய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்: அஸாத் ஸாலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அஸாத் ஸாலி மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்…

Read More