Headlines

நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம் பெற்றது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 30 மாணவிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். தாம் பெற்றுக் கொண்ட பயிற்சிகளின் மூலம் கிராமத்தினதும்,நாட்டினதும் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யுமாறு அமைச்சர் பயனாளிகளிடத்தில் வேண்டிக் கொண்டார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,கிழக்கு…

Read More

கொடுமைகளுடன் 13 வருடங்களாக சம்பளம் கிடைக்காமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் சவுதியில் மீட்பு

அஸ்ரப் ஏ சமத் அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத் நகரத்திற்குக்குச் சென்ற தமயந்தி வயது (47) என்ற பெண் சென்ற உடனேயே எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தார். பின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்து தமது குடும்பத்துடன் இணைந்து கொண்டார். றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப் பணிப் பெண்னை கடந்த 13 வருடங்கள் தேடி கடந்த நிலையில் கடந்த மாதமே அவரை கண்டுபிடித்துள்ளனர். அவர் வாழ்ந்த வீட்டை அணுகி…

Read More

வேதங்களையும் இறைதுதர்களையும் விமர்ச்சிப்போரை தண்டிக்க சட்டங்கள் தேவை

வானில் இருந்து இறக்கியருளபட்ட வேதங்கள் மற்றும் இறைதுதர்களை விமர்ச்சிப்போரையும் இழிவு படுத்துவோரையும் கடுமையாக கண்டித்து தண்டிக்கும் விதத்திலான புதிய சட்டங்களை மனித உரிமை அமைப்புகள் உருவாக்கி செயல் படுத்துவதின் மூலம் மட்டுமே உலகில் மலிந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுக்க முடியும் என்று மனித உரிமைகளுக்கான ஜெனிவா மாநாட்டில் சவுதி அரேபியாவின் பிரதிநிதி பைஸல் தராத் வேண்டு கோள் வைத்தார் மார்ச்சு 23 ஆம் தேதி அவர் பேசும் போது உலகில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களில்…

Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பாறுக் சிகான் 2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார் நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.  இதேவேளைஇ இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால்இ…

Read More

மஹிந்த தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது – அமெரிக்கா

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி, குடும்ப ஆட்சி, அச்சுறுத்தி பிளவுபடுத்தும் கொள்கை, உறுதியற்ற நிலையில் சிக்கி தவித்த இலங்கையில் இடம்பெற்ற தேர்தலின் போது நம்பிக்கையளிக்கும் வகையில் மக்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி…

Read More

இஸ்ரேல் வாழ் அரேபியர்களிடம் மன்னிப்பு கோரினார் அதிபர் நெதன்யாஹு

இஸ்ரேல் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நெதன்யாஹு, அந்நாட்டைச் சேர்ந்த அரேபியர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். அவரது லிகுட் கட்சி இந்த வாரத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய பெஞ்சமின் நெதன்யாஹு, “நான் கடந்த வாரம் பேசிய சில விஷயங்கள் அரேபிய வாழ் இஸ்ரேலியர்களுக்கு எரிச்சலுட்டுவதாக அமைந்தது. ஆனால் அது என்னுடைய நோக்கமில்லை. நான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்று கூறினார். உச்சகட்ட தேர்தல் வாக்கு வேட்டையின்போது, அரபு…

Read More

ஐ.எஸ். அதிரடி – கள்ளக்காதல் ஜோடி கல்லால் அடித்து கொலை

ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். கொலை, கொள்ளை மற்றும் கள்ளக்காதல் போன்றவைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொல்லப்படுகின்றனர். அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்தது. வட ஈராக்கில் தங்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்ட மொசூல் நகரில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடிகள் இழுத்து வரப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் கூடும் நடுத் தெருவில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொன்றனர்….

Read More

இராணுவ வீரரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக சந்தேகம்

அரலகன்வில, மீவத்புர பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார்  சந்தேகிக்கின்றனர். இராணுவ வீரரான ரணதுங்ககே சுகத் குமார (வயது 28) என்பவரே  காணாமல் போயுள்ளார். மூன்று நபர்களுடன் மாகாவலி கங்கையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராணுவ வீரரை, முதலை இழுத்துச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்  குறித்து எந்த வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன இராணுவ வீரரை…

Read More

கிராமத்துக்குள் நுழையும் நாகங்கள்

இரத்தினபுரி, கொடக்கவெல, யஹளவெல கிராமத்துக்குள் கடந்த சில நாட்களாக நாகபாம்புகள் நுழைவதால் அக்கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றன. இந்த நாகங்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கொடக்கவெல பொலிஸாரின் உதவியை கிராமவாசிகள் நாடியதை அடுத்து நாகங்களைப் பிடிப்பதற்காக தேர்ச்சிபெற்ற இளைஞன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவ்விளைஞனால் கடந்த மூன்று தினங்களில் 10 நாகபாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5 மற்றும் 6 அடி நீளமானவை எனவும் அந்த நாகங்களின் உடல் மிகவும் பருத்துக் காணப்படுவதாகவும்…

Read More

அதிவேக வீதியில் இலவசமாக பயணிக்க அனுமதி கோரும் சாரதிகள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு செல்லும் போது தங்களுக்கு அதிவேக வீதியை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு அம்பியூளன்ஸ் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் குளியாபிட்டி பகுதிகளில் இருந்து அடிக்கடி நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆபாய கட்டத்தில் உள்ள நோயாளர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றவென சில அம்பியூளன்ஸ் சாரதிகள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்துகின்றனர். இதன்போது அதிவேக வீதிக்கு செலுத்த வேண்டிய அனுமதிக் கட்டணத்தை…

Read More

19 ஆவது திருத்தத்திற்கு ஜே.வி.பி ஆதரவு

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்திருந்த நிலையில் முக்கிய கட்சிகள் இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்களையும், கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. இந்த நிலையில் இலங்கையில் முக்கிய கட்சிகளில் ஒன்றன ஜே.வி.பி தனது கருத்தை இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்ததிற்கு தம் கட்சி ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி இன்று தம் முடிவை வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த செயலாளர் ரில்வின்சில்வா…

Read More

ஏ.எச்.எம்.பௌசி, அனர்த்த முகாமைத்து அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

ஏ.எஸ்.எம்.ஜாவித் அனர்த்த முகாமைத்து அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஏ.எச்.எம்.பௌசி கொழும்பு -7 வைத்திய வீதியில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் தனது அமைச்சுக் கடமைகளை இன்று(25) பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, மஹிந்த அமரவீர, பிரதிமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, பாரளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாரூக், ஆர்.யோகராஜன் அமைச்சின் செயலாளர் பந்துசேன, முன்னாள் ஐ.ரீ.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து…

Read More