Headlines

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை




பாறுக் சிகான்

2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார் நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

 இதேவேளைஇ இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால்இ அவரையும் அடுத்த தவணையில் மன்றுக்கு வருமாறு நாடாளுமன்றத்தினூடாக அழைப்பாணை விடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
 முன்னணி சோஷலிச கட்சியைச் சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி காணாமல் போனார்கள்.
 அவர்கள் பயணம் செய்த மோட்டார் வண்டி கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் தொடர்பான தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை. இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள்இ யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் எனஇ கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலையில்இ தற்போது அந்த வழக்கின் விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
வழக்கு விசாரணைகளின் போதுஇ இருவரும் காணாமற்போனவர்களின் விவரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அரச தரப்பால் அழுத்தங்கள் தொடர்ந்து இருந்தன என அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்துஇ முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியஇ யாழ். மாவட்ட படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கஇ அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர்இ பொலிஸ் மா அதிபர்இ சட்ட மா அதிபர் ஆகியோரையும் நீதிமன்றத்தில்  ஆஜராகும்படி நீதவான் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
லலித்இ குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லஇ அவ்விருவரும் கடத்தப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள்’ என்று கூறியிருந்தார் என நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்னஇ கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதிஇ யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
லலித் மற்றும் குகன் ஆகியோருடன் போராட்டங்கள்இ கூட்டங்களை நடத்திய போது அவர்களுடன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியையும் சாட்சியம் அளிப்பதற்கு இன்று புதன்கிழமை ஆஜராகும்படி கூறியிருந்த போதும்இ அவரும் இன்று மன்றில் ஆஜராகவில்லை.
இந்நிலையில்இ இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் கெஹெலியவையும் ஹந்துன்நெத்தியையும் அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *