பாடசாலை கதவினை அடைத்து வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
எம்.ரீ.எம். பாரிஸ் /எம்.ரீ.எம். பஹத் / அஹமட் இர்ஸாட் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (29) திங்கட்கிழமை காலை பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையின் உயர் தர விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு, அருகாமையில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பாடசாலை மாணவர்கள் குற்றஞ்சாட்டி இவவார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனைப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நலன் கருதியே, இப்பாடசாலைகள் ஆண், பெண் பாடசாலை என வெவ்வேறாகப்…
