Headlines

மகிந்த – மோடி இன்று பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மற்றும்  இந்தியப் பிரதமர் இடையே இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.அமெரிக்க நேரப்படி இன்று காலை 11.45 மணிக்கு இந்த இருதரப்புச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இரு நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.சுமார் 30 நிமிடங்கள் வரை நடைபெறவுள்ள இச் சந்திப்பின்போது இலங்கை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அஷின் விராதுவின் இலங்கை வருகை குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

(இனாமுல்லாஹ் மஸிஹுதீன்) மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த சக்திகளுக்குப் பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எமனும் பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப் பட்டு வருகை தந்துள்ளமை இந்த நாட்டின் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் மதத்திற்கோ அரசியலுக்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்கள் போற்றும் பௌத்த மதத்திற்கும் தம்முடையது என உரிமை கோரும்…

Read More

(வீடியோ & படங்கள் ) சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் மியன்மாரின் அஷின் விராது

VIDEO Post by அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். download video_2014-09-27_09-16-49 பொதுபல சேனா பெளத்த அமைப்பு நாளை கொழும்பு சுகததாஸ அரங்கில் பிரமாண்டமான ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் ஏற்கனவே இலங்கை மற்றும் உலகில் உள்ள பெளத்த தலைவர்கள் 7000 பேர் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய தேரர் என அழைக்கப்படும் அஷின் விராது வருவது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவித்து இருக்கவில்லை. அதேவேளை சற்றுமுன் மியன்மாரின் அஷின் விராது இலங்கையை வந்தடைந்ததாக பொதுபல சேனா அமைப்பு தனது…

Read More

“நதியைப்பாடும் நந்தவனங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிஷாத் (படங்கள் இணைப்பு)

(ஜஹான்சர் கான்) தற்போது (26.09.2014) வெகு விமர்சையாக காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் “நதியைப்பாடும் நந்தவனங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஹிஸ்புள்ளாவின் அழைப்பில் கலந்து கொண்டபோது….

Read More

ஆசிய கூடைப்பந்து போட்டிகளில் ‘ஹிஜாப்’ சர்ச்சை: கத்தார் அணி விலகல்

தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை…

Read More

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினேழு வயது பெண் பிள்ளையை காணவில்லை

(வாழைச்சேனை நிருபர்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினேழு வயது பெண் பிள்ளையை கடந்த 06.09.2014ம் திகதி முதல் காணவில்லை என்று பிள்ளையின் தந்தை வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மஜீட் ஜும்ஆ பள்ளிவாயல் வீதி றஹ்மத் நகர், நாவலடி, ஓட்டமாவடி என்ற முகவரியில் வசிக்கும் முஹைதீன் பாவா அச்சிமுஹம்மது (வயது 46) என்பரே தனது பிள்ளை வீட்டில் இருந்து காணமல் பொயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 07.09.2014ம் திகதி ஊஐடீ –ii –…

Read More

முஸ்லிம்களை ஐவேளை தொழுகை நேரங்களிலும் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்க வேண்டும் – ஹெல உறுமய!

நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…

Read More

நியூயோர்க்கில் மஹிந்த, ஒபாமா தம்பதிகள்!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் மிஷேல் ஒபாமா வழங்கிய வரவேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒபாமாவும் நியூயோர்க் சென்றுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சகிதம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது பாரியாருடன் எடுத்துக்கொண்ட உத்தியோகபூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

ஐ.நா மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் நியாயற்றது – ஜனாதிபதி

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை துரதிஸ்டவசமாக தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐந்தாண்டு குறுகிய காலத்தில் நாட்டில் நல்லிணக்கம், புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் நாடு அடைந்து வரும் முன்னேற்றங்களை மிகவும் சொற்ப அளவிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அங்கீகரிக்கின்றது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். ஐக்கிய…

Read More

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்க, பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடாத்திய அமெரிக்கா..!

பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க  புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 10 ஆயுததாரிகள் உயிரிழந்தனர். அந்த மாகாணத்திலுள்ள தத்தா கேல் நகரையொட்டிய அல்வாரா மாண்டி பகுதியிலிருந்து ஒரு குடியிருப்பைக் குறிவைத்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் ஆளில்லா விமானம் தாக்குதல் நிகழ்த்தியது. இதில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 10 உயிரிழந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இதே பகுதியில் கடந்த மாதம் 6-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பேர்…

Read More

ஐ.நா. சபையில் ‘ராபியா’ அடையாளத்தை காட்டி உரை நிகழத்திய துருக்கிய ஜனாதிபதி

(Inamullah Masihudeen) தற்பொழுது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 69 ஆவது பொது சபை மாநாட்டில் நேற்று உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரஜப் தயிப் அர்டோகான் எகிப்தின் சதிப்புரட்சி அரசினை சாடியதோடு பார்வையாளர்களாக இருக்கும் சர்வதேச பிராந்திய சக்திகளையும் அக்கிரமத்தின் பங்காளிகளாக வர்ணித்தார். பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்து, மக்களின் நியாயமான ஜனநாயக போராட்டங்களை கனரக ஆயுதங்கள் கொண்டு அடக்கி எகிப்தின் சட்டபூர்வமான அரசை கவிழ்த்து ஜனாதிபதியையும் ஏனைய…

Read More

நாட்டில் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளது

நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பேரிம்பநாதன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதன்கான வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று நேற்று  யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More