Headlines

வன்செயலை தூண்டிய யூதர்கள் கைது




அரபு மக்களுக்கு எதிரான வன்செயல்களை தூண்டிய சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய போலிஸார் யூத தீவிரவாத குழு ஒன்றின் 10 உறுப்பினர்களை கைது செய்திருக்கிறார்கள்.

யூதர்களும் அரபுக்களும் ஒன்றாக வாழும் கொள்கையை எதிர்க்கின்ற ”லெகவா” என்னும் குழுவைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

ஜெரூசலத்தில் யூத மற்றும் அரபுச் சிறுவர்கள் ஒன்றாகப் படித்த பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இந்தக் குழுவைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *