Headlines

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சியில் மகிந்த அரசு?

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர். மேலும் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அமைச்சர் மைத்திரிபாலவும் உத்தரவாதமொன்றை நேற்று வழங்கியுள்ளார். இதனையடுத்து இன்று மாலை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது பெயரை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றிரவு அலரிமாளிகையிலிருந்து சில விசேட…

Read More

ஞானசாரரின் நாடகம் தோல்வியில் முடிந்துள்ளது – ஆசாத் சாலி

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வர வேண்டுமென ஞானசாரர் தேரர் ஆசைப்பட்டது மஹிந்த ராஜபக்ஸவின் விருப்பத்திற்கு அமையவே என ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி தோல்வியடையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நம்பினார். எனவே தோல்வியடையும் வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்த ஞானசாரர் முயன்றார். ஆகவேதான் ரணிலுக்கு ஆதரவாக ஞானசாரர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். இருந்தபோதும் நாம் சகல திட்டங்களையும் முறியடித்து…

Read More

மைத்திரிபால சிறிசேன குறித்து முஸ்லிம் காங்கிரஸிடம் கவலை வெளியிட்ட பசில்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 20-11-2014 அன்று நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸினரைப் பார்த்து கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ஸ, பாருங்களேள் எங்கட செயலாளர் (மைத்திரிபால சிறிசேன) பிரச்சினை படுத்துகிறார் என தனது கவலையை வெளிப்படுத்தியதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

Read More

இலங்கை அரசியலில் அடுத்து வருகின்ற 48 மணித்தியாலங்கள் சுடு பறக்கும்..!

நஜீப் பின் கபூர் இலங்கையில் அடுத்து வருகின்ற 48 மணித்தியாலங்களும் அணல் பறக்கின்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் என்பதனை நமது வாசகர்களுக்கு முன்கூட்டி அறியத் தருகின்றோம்.  செய்திகளை உடனுக்குடன் முடிந்தளவு வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எமக்குக் கிடைத்த மிகப் பிந்திய தகவலின்படி சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவை ரணில்  விக்ரமசிங்ஹ பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அதற்கான உறுதி மொழி இந்த ஏற்பாட்டின்  முக்கிய பாத்திரமாக செயலாற்றுகின்ற  மாதுவாவே சோபித தேரருக்கு ரணிலினால்…

Read More

அமைச்சர் மைத்திரியை காணவில்லை?

–  காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்- சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ஊர்ஜிதமாகவுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் அவரது பாதுகாப்;பை கருத்திற் கொண்டு – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று (21)காலை 10.30 மணிக்கு அமைச்சர் பைத்திரிபால சிறிசேன பங்குபற்றவிருந்த ஊடகவியலாளர் மாநாடு இந்த நிமிடம் வரை ஆரம்பமாகவில்லை என தெரியவருகின்றது. ஊடகவியலாளர் மாநாடு 10.30 மணிக்கு இடம்பெறும் என…

Read More

INCO 2015 கண்காட்சி (PHOTOS)

ஏ.எச்.எம். பூமுதீன் INCO 2015 கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தகச் சந்தையும் அடுத்த வருடம் ஜூன் மாதம் 26,27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. இது தொடர்பிலான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று ( 19/11/2014) கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாயகக் கலந்துகொண்ட கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றுவதையும் – அமைச்சருக்கு குறித்த நிகழ்வையொட்டிய நினைவுச்சின்னம் வழங்கப் படுவதையும் – கலந்துகொண்ட பொறியியலாளர்களையும் இங்கு காணலாம்.

Read More

பிரகடனத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

மற்றொரு பதவிக் காலத்துக்காக  ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

சர்வதேச குழந்தைகள் தினம் இன்று

சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபையால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக பிரகடணப்படுத்தியது. அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர்,…

Read More

கஹட்டகஹ உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு (PHOTOS)

கைத்தொழில் வானிபத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய சுமார் 40 உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 18ம் திகதி அமைச்சில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

Read More

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஆசிய நாட்டவர்கள்

நியாயமான தேர்தல் ஒன்றுக்கான பொதுமக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி 35 ஆசிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் சர்வதேச கண்காணிப்பாளர்களும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடிய பின்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரான் அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் உடனடித் தீர்வை எட்ட சீனா வலியுறுத்தல்

ஈரானுடன் தற்போது ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான P5+1 நாடுகள் வியென்னாவில் நடத்தி வரும் அணுவாயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சு வார்த்தையின் காலக்கெடு நவம்பர் 24 இல் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர் உறுதியான ஒருமித்த ஓர் தீர்வை எட்ட வேண்டும் என சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக நீடிக்கும் ஈரானின் அணுச் செறிவூட்டலைக் கட்டுப்படுத்தும் இப்பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் அளவு மற்றும் நோக்கம்…

Read More

ஜனாதிபதியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்!- தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் நிச்சயமாக ஜனவரி 2ம் திகதி நடைபெறாது. ஏனெனில் அது ஒரு வெள்ளிக்கிழமை அத்துடன் பௌர்ணமி தினம் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தேர்தல் ஜனவரி 3ம், 7ம்  அல்லது 10ம் திகதிகளில் நடைபெறுமா? என்று கேட்ட போது அது கடவுளுக்கே தெரியும் என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். எல்லாமே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More