Headlines

மாண்ட குழந்தை மீண்டதாம்; மானிப்பாயில் பரபரப்பு

 யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர்.  இதனை அடுத்து  குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது  குழந்தை…

Read More

இலங்கை பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு காரணம் கூறும் அமெரிக்கா

சர்வதேசமே இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில்  உள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு சமூகமே பொறுப்பாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் 27வது அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது.இலங்கை உட்பட்ட சில நாடுகளில் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அமெரிக்கா இதன்போது தெரிவித்துள்ளது.இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட அமெரிக்கா, ருவண்டா, டார்பூர், சிரியா போன்ற நாடுகளிலும் இதேநிலையை காணக்கூடியதாக உள்ளது…

Read More

மஹிந்த அரசின் பொய்யுரைகளை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்

தேர்தலுக்கான மஹிந்த அரசின் இலஞ்சமே மின்கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைக் குறைப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்தவினதும் அவர் தலைமையிலான அரசினதும் பொய்யுரைகளை இனியும் நாட்டு மக்கள் நம்பப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  “நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் ஆட்சிக்கு வந்த நான் தேர்தலுக்காகச் செயற்படும் தலைவன் அல்லன். மின்கட்டணத்தை நாம் குறைத்தது தேர்தலை இலக்காகக் கொண்டல்ல. அன்று நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அதனை மேற்கொண்டோம்” என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில்…

Read More

ஆபிரிக்க நாட்டு மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் ஒரு மில்லியன் கையுறைகள் அனுப்பிவைப்பு

ஆபிரிக்காவில் எபோலாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கான இலங்கையின் பங்களிப்பாக, ஒரு மில்லியன் சத்திரசிகிச்சைக் கையுறைகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (செப். 18) அலரி மாளிகையில் வைத்துக் கையளித்தார்.

Read More

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை விரைவில் அறிவிப்போம்: த.தே.கூ

எதிர்வரும் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினாவியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் நிச்சயமாக தீர்மானமெடுக்கும். நாட்டின் ஆட்சியினை தீர்மானிக்கும் தேர்தலில்…

Read More

பிரிவிற்கு எதிராக ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களிப்பு

பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதை வாக்கெடுப்பு முடிவுகள் தெளிவாகியுள்ளன. இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இவை இணைந்துள்ள பகுதி கிரேட் பிரிட்டன் அல்லது பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுடன் வடக்கு அயர்லாந்தும் இணைந்துள்ளது.   இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு ஆக செல்ல முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஸ்கொட்லாந்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரிட்டனிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தது.   ஆனால் ஸ்கொட்லாந்து…

Read More

பாதணிகள் என்னுடையதுதான் ஆனால் பழையது

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையில் 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு, காலி முகத்திடலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தான் அணிந்து சென்ற பாதணிகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வீட்டிலிருந்த பாதணிகளில் இரண்டை அணிந்து சென்றேன். அந்த பாதணிகளில்…

Read More

அமெரிக்காவை எதிர்கொள்ள தயார் – ISIS

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். களை ஒடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால், அமெரிக்க இணைதளபதி மார்டின் டெம்ப்சி கூறும்போது, அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் மட்டும் பலன் தரும் என்று நினைக்கவில்லை. அது பலன் தராதபட்சத்தில் தரைவழி தாக்குதல் நடத்தவும் தயாராவோம் என்று கூறினார். இதையடுத்து ஐ.எஸ். வாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 52 வினாடிகள் ஓடும் இந்த…

Read More

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 96 எம்.பி.க்கள் O/L பரீட்சையில் சித்தியடையாதவர்கள்..!

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமைகள் கூட கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். தற்போதைய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 142 பேருக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வித் தகமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது மொத்தமாக 142 பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 94 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாதாரண…

Read More

பதுளை பள்ளிக்கு ரிசாத் விரைவு பொலிசாருக்கு கடும் கண்டனம்

(எ.எச்.எம்.பூமுதீன்) பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை  கைது செய்வதிலும்  துரித கவனம் செலுத்தினார். இதற்கமைய . ஒருவர்  கைது செய்யபட்டதுடன்  மூவரைத்தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர். பொலிசாரின் அசமந்தப் போக்கே இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதற்கு காரணம் என அமைச்சர் அதன்போது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பதுளை ஜூம்ஆ பள்ளிவாசல், அல்-அதான் பாடசாலை மற்றும்  மூன்று முஸ்லிம் வரத்தக நிலையங்கள்…

Read More

ஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; தேர்தல் கடமைகளில் 12,500 அரச அதிகாரிகள்

ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு தினங்களேயுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதேவேளை தேர்தல் நடைபெறவுள்ள பதுளை, மொனராகலை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் இன்று முதல் தமது தேர்தல் கடமைகளை ஆரம்பிப்பதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார். இன்று முதல் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதுடன், நாளை (19) வாக்குப் பெட்டிகள். வாக்குச்…

Read More

233 ஹெக்டயர் கடலை நிரப்பி சொர்க்கபுரி நிர்மாணம்: இருநாட்டு ஜனாதிபதிகளால் நேற்று ஆரம்பித்து வைப்பு

கடலை நிரப்பி 233 ஹெக்டயரில் உருவாக்கப்படும் துறைமுக நகரத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி i ஜின்பிங் ஆகியோரினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1337 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படும் இந்த பிரமாண்டமான அபிவிருத்தி திட்டம் 8 வருடங்களில் முழுமையடைய இருக்கிறது. இரண்டு கட்டங்களாக மேற் கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் மூலம் பெருமளவு நேரடியான மற்றும் மறைமுகமான தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வுள்ளன….

Read More