Headlines

மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பு மனுவை, தேர்தல் ஆணையாளர் நிராகரிக்க முடியும் – விஜயதாசராஜபக்ஷ

GTN ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த இரண்டாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்….

Read More

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் – JVP

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் என ஜே.வி.பி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சித்தால் வழக்குத் தொடரப்படும் என கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியான  அல்லது தார்மீக ரீதியான உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் – சிரேஸ்ட சட்டத்தரணி

மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி பெற்றி வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எத்தனை தடவையும் பதவி வகிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பது…

Read More

கல்வியியல் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சைப் பெறுபேறு இன்று இணையத்தில்!

கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் கல்வி அமைச்சின் www.moe.gov.lk  எனும் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்விக் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.   ஆங்கில பாடநெறிக்கு 320 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், தொழில்நுட்ப பாடநெறிக்கு 100 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   இப்பாடநெறிகளுக்கான போட்டிப் பரீட்சையில் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Read More

மிகின் லங்காவின் ஒருநாளைய நட்டம் ரூபா ஒரு கோடி-ரணில் விக்கிரமசிங்க

மிகின் லங்கா விமான நிறுவனத்தை மூடிவிட்டால் வருடத்திற்கு 365 கோடி ரூபா பணத்தை மீதப்படுத்தலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். பொலன்னறுவையில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்நிறுவனத்தின் ஒருநாளைய நட்டம் ரூபா ஒரு கோடி எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.(iln)

Read More

பௌத்தர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புத்தகம் அடித்து வினியோகம் பொதுபல சேனாவினா

இலங்கை பெளத்தர்களுக்கு எதிராக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிநாடுகளுக்கு விநியோகிப்பதற்கு இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. இத் தேசத்துரோகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.   பான் கீ மூன், நவிப்பிள்ளை மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பெளத்தர்களுக்கு எதிரான சதித்திட்டத்தை தகர்க்க உலகின் பெளத்த நாடுகளுடன் இணைந்து செயற்படும் திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம் என்றும் தேரர்…

Read More

1 கோடிக்கு விலை போன தாய்

உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம். ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். அதாவது குயாங்கானை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல…

Read More

சாமியைக் கைது செய்யுங்கள்! மீனவப் பிரதிநிதிகள் கொதிப்பு

இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஒப்புக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீனவர் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி யேற்று 100 நாள்கள் கடந்துவிட்டன. இந்த மூன்றரை மாதங்களில் மட்டும் 350-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 63 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு…

Read More

கல்முனைக்குடி பள்ளிவாசல் வாகனத் தரிப்பிட சிக்கல் தீர்ந்தது

கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டு வந்த வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முஹைதீன் குறித்த தடையுத்தரவை நீக்குவதாக அறிவித்தார். இதன்போது, குறித்த வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கடந்த 2014.08.18ஆம் திகதி தன்னால் வழங்கப்பட்ட 14 நாட்களுக்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக நீதிபதி அறிவித்ததுடன், குறித்த வாகனத்…

Read More

மரக்கடத்தலில் ஈடுட்ட பிரதேசசபைத் தலைவரின் தம்பி சிக்கினார்

நாகொடை பிரதேச வனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், பிரதேசசபைத் தலைவரின் சகோதரர், உடுகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி – நாகொடை பிரதேசசபைத் தலைவரான ஹேமசந்ர விலேகமவின் தம்பி எனக் கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குறித்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, குறித்த மரங்களைக் கொண்டு செல்ல பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார். எனினும் சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர்…

Read More

வட்டரக்க தேரரின் இரகசிய கடிதப் பையை பெற்றுத் தாருங்கள் – நீதிபதியிடம் வேண்டுகோள்!

ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் மீதான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.பாணந்துரை பிரதான மஜிஸ்த்ரேட் ருசிர வெலிவத்தவினால் இவ்வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கியதாக கூறப்பட்டு தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகள் ஆறுபேரை அடுத்த விசாரணையின் போது நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு…

Read More

திவி நெகும வாழ்வின் எழுச்சி திட்டதினுடாக மன்னாரில் சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000-50000 ரூபா வரை கடன் உதவி

பொருளாதார அமைச்சினால் நடாத்தப்படும் திவி நெகும வாழ்வின் எழுச்ச்சிதிட்டம் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டதினுடாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகள் 25 பேருக்கு 5000 ரூபா முதல் 50000 ரூபா வரை நுகர்வு மற்றும் சுய தொழிலுக்காக கடன் வழங்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு இக்கடன் தொகைகளை…

Read More