Headlines

தெற்காசியாவில் அல் கைய்தாவின் நடவடிக்கைகள் ஆரம்பம்

தெற்காசியாவில் தமது இயக்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அல் கைய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஷாவாஹிரி தெரிவித்துள்ளார். தமது குழுவின் இந்திய கிளை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் தென்காசியாவில் ஜிகாத்தின் கொடி உயர்த்தப்பட்டுள்ளதாக வீடியோ காட்சியொன்றின் மூலம் அவர் அறிவித்துள்ளார். ஆப்கான் தலைவர் முல்லா ஒமரிற்கான ஆதரவு புதுப்பிக்கப்படும் என இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சியில் அவர் கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு பகிரங்க மிரட்டலாக…

Read More

புதிய மாணவர்கள் மீது பகிடிவதை

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை 8 மணியளவில் குறித்த மாணவர்களின் மட்டக்களப்பில் உள்ள வீடுகளுக்கு சென்ற சிரேஸ்ட மாணவர்கள் சிலர் குறித்த மாணவர்களை அழைத்துச்சென்றுள்ளனர். வீட்டில் இருந்து சென்றவர்கள் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மாணவர்களை தேடியுள்ளனர். இதன்போது குறித்த மூன்று மாணவர்களும் காயங்களுடன் கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள கடையொன்றின்…

Read More

அதிபரின் தாக்குதலில் மாணவர்கள் படுகாயம்

கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தில் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. மேலதிக விசாரணைகளை உடுகம்பொல பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Read More

நான் அப்படி கூறவில்லை- சுப்பிரமணியன் சுவாமி தெரிவிப்பு

தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று தாம் கூறவில்லை என  பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள், அவர்கள் தொழிலாளர்கள் அதனால் அவர்களை விடுவித்துவிடுங்கள், ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்பதால் அவற்றை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன்….

Read More

கல்முனையில் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்த BBS சதி!

பொது பல சேனா அமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள பௌத்த பிக்கு கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முஸ்தீபு. கல்முனை தமிழ் பிரதேசங்களில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளால் இன்று நடாத்தப்படவிருந்த எதிர்ப்பு ஊர்வலமும் உண்ணாவிரதப் போராட்டமும் கல்முனைப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து நீதி மன்றத்தினால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கல்முனை நகரில் முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கு இன்னுமொரு தரப்பினரால் தடை விதிக்கப்படுவதாகவே இந்த எதிர்ப்பு பேரணி…

Read More

ஊவாவில் இன்று தபால் மூல வாக்களிப்பு

ஊவா மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று 4ம் திகதி மற்றும் நாளை 5ம் திகதியும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி றோஹன கீர்த்தி திசாநாயக அறிவித்துள்ளார். இம் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களிலும், காரியாலயங்களிலும் சேவை புரிகின்ற அரச ஊழியர்கள் தத்தமது தலைமைக்காரியாலயத் தலைவரின் சிபார்சுக்கமைய காலை 9 மணி முதல் 3 மணி வரை தபால் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும். ஏலவே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் அறிவுரைக்கமைய இவ்வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அரச ஊழியர்களை வாக்களிக்குமாறு…

Read More

முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாத அமைப்புகளே எங்களது ஒற்றுமைக்கு வழிகோலியது – ரவுப் ஹக்கீம்

ஊவா மாகாணசபை தேர்தலில் நாங்கள் ஒன்றுபட நேர்ந்ததற்கு அரசாங்கமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ காரணமல்ல. முஸ்லிம்களுக்கெதிராகத் தலைதூக்கியுள்ள தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகளே எங்களது ஒற்றுமைக்கு வழிகோலியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். ஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டையிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பதுளை சைமன் பீரிஸ் நகர மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…

Read More

ISIS களை ஒழித்துக்கட்டுவேன் – ஒபாமா சூளுரை

IS, ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து “இஸ்லாமிய நாடு” என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில், IS மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த IS, அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோரை பிடித்து சில தினங்களில் ஸ்காட்லாப்பை தலை துண்டித்து கொன்றனர். மற்றொரு பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலேயும் தலை…

Read More

யார் ஜனாதிபதி என்பதை முஸ்லிம்களின் வாக்குகள் தீர்மானிக்க வேண்டும் – ரிசாத் பதியுதீன்

முஸ்லிம் சமுகத்தின் மானத்தையும் மரியாதையும் காப்பாற்றி சமுகத்தை கௌரவமாக வாழவைப்பதற்கான கூட்டுத்தான் நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இணைந்த இந்தக் கூட்டாகும். பொதுபலசேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யார் ஜனாதிபதி என்பதை இங்குள்ள 20 இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். பதுளை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும்;…

Read More

இஸ்லாத்துக்கு மாறுங்கள், நேரடியாக சொர்க்கம்தான்”: டில்ஷானிடம் ஷேஜாத், பாக். கிரிக்கெட் சபை விசாரணை!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது. இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு, கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன்…

Read More

முல்லைத்தீவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சார இணைப்புக்கள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் கிடைக்காத தமிழ் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட மின்சாரம் வழங்கும் நிகழ்வு இன்று 03 புதன்கிழமை இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமுனை, பூவரசன் வெளி, குமுளமுனை ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியினால் மின்சாரம் இணைப்புக்கள்  வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர்- இது வரை மின்சாரம் கிடைக்காத முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராமங்களுக்கு இரண்hடம் கட்ட…

Read More

ISIS மீது குண்டு மழைப் பொழியும் அமெரிக்கா

ஈராக்கில் 124 தடவை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. இதனால் ISISகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்தீஷ் படைகள் பல பகுதிகளை மீண்டும் மீட்டுள்ளனர். மொசூல் அணையும் ISIS களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதி முழுவதையும் மீட்க அமெரிக்க போர் விமானங்கள் ISISகள் மீது நேற்று குண்டு மழை பொழிந்தன. அதில், ISISகளின் 16 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. பல வாகனங்கள்…

Read More