Headlines

காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேலில் எதிர்ப்பு

காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் பாதியளவான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதில் அமைச்சரவையின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக இஸ்ரேல் தேசிய வானொலி குறிப்பிட்டுள்ளது. இதன்படி வெளியுறவு அமைச்சர் அவிக்டர் லிபர்மன், வர்த்தக அமைச்சர் நப்தாலி பென்னட், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிளாட் எர்டன் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சர் யிட்சக் அஹ்ரோனோவிக் ஆகியோரே எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யுத்த நிறுத்தம் குறித்து ஆரம்பத்தில் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசிக்கும்படி நப்தாலி பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கோரியுள்ளார்….

Read More

போதைப் பொருள் கடத்தலை தடுக்க பாகிஸ்தானின் உதவியை நாடிய இலங்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கடத்தப்படுவதற்காக கொழும்பு துறைமுகத்துக்கு ஹெரோயின் மறைத்து கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் புதுடில்லியிலும் கடந்த வாரம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இலங்கை, இந்திய அதிகாரிகளுக்கு இடையில் போதைவஸ்தை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்போது போதைவஸ்து கடத்தலை தடுக்க பாகிஸ்தானிடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக அஜித ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீதுவையிலும் கண்டி கட்டுகஸ்தோட்டையிலும் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைவஸ்துக்கள் தொடர்பில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!

21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார். இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More

ஒருமித்த இலங்கைக்குள் போதிய அதிகாரங்களுடனான தீர்வே அவசியம்: இரா.சம்பந்தன்

ஒருமித்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக் கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் நேற்று புதன்கிழமை ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவுக்கான விஜயமொன்றை கடந்த 21ஆம் திகதி மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை புதுடில்லியில் சந்தித்த பின் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். தமிழ்நாட்டுக்கான விஜயத்தின் போது, தமிழக பாரதீய…

Read More

மோடியின் வேண்டுகோளை ஏற்று த.தே.கூ செயற்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More

நிறைவேற்று அதிகார முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்!- அமைச்சர் வாசுதேவ

ஊவா தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பில் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின் காரணமாக பேச்சுவார்த்தைக்கு திகதி ஒன்றை ஒதுக்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல்களின் பின்னர் நிறைவேற்று…

Read More

இலங்கைக்கு புதிய பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி நியமனம்

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு பாதுகாப்பு அதிகாரியாக புதியவர் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார். கேர்ணல் மொஹமட் இர்ஷாத் கான் என்பவரே இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இடையில் புதிய முயற்சிகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை இராணுவ இணைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பாகிஸ்தானிய அரசாங்கம் ஆவலுடன் இருப்பதாக…

Read More

மோடியை சந்திக்க ஒபாமா ஆர்வம்

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக்கொண்டார். வருகிற செப்டம்பர் மாதம் மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றிய பின்பு வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30–ந்தேதி அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேச்சு நடத்துகிறார். மோடி– ஒபாமா சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது….

Read More

2000 ஆண்டு பழமையான மட்பாண்ட துண்டுகள் கண்டுபிடிப்பு

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜா சோமதேவ உள்ளிடட குழுவினர் இந்த அகழ்வாராச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்த பண்டைய கால மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.

Read More

காஸாலை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கிறோம் – கட்டார்

இஸ்ரேல் – ஹமாஸ்  யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் கட்டார் காசா பகுதியை வெகு விரைவில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் துருக்கி அனைத்து எல்லை கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் உடன் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Read More

ஜம்இயத்துல் உலமா, ஷூரா சபை ஆகியவற்றிக்கு பொதுபல சேனா சவால்!

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே. இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய…

Read More

10 வயது சிறுவன் வளர்த்த வாழைமரமொன்றில் அதிசயம்

(TM) இரத்மலானையைச்சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவனால் எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்க்கப்பட்ட புளிவாழைமரமொன்று ஈன்ற குலையில், அதிசயமான வாழைச்சீப்பொன்று இருந்துள்ளது. அச்சீப்பில் 71 காய்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More