Headlines

அமைச்சர் றிஷாதின் கரங்களை பலப்படுத்துவோம் – அமைச்சர் சத்தியலிங்கம்

– சுஐப் எம்.காசீம் – “வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையிலும் கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அமைச்சர் றிஷாத்தின் கரங்களை நாங்கள் பலப்படுத்துவோம்” இவ்வாறு வடமாகாண சுகாதார, சுதேச சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சர் டாக்டர். பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தின தேசிய விழா, வவுனியா காமினி மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற போது, கெளரவ அதிதியாக கலந்துகொண்ட…

Read More

வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் விற்பனை

வவுனியா வைத்தியசாலையை  அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த  விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது…

Read More

மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  உறுதிப்படுத்தினார். கைது  செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி…

Read More

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். நீதித்துறையே! காமுகர்களை கண்டுபிடி, சட்டத்தின் முன்நிறுத்து, மரண தண்டனை வழங்கு உள்ளிட்ட வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தியவாறு…

Read More

வவுனியா மாணவி படுகொலை விசாரணைக்கு சிறப்புக் குழுக்கள்

– எம்.எப்.எம்.பஸீர் – வவு­னியா  மாணவி ஹரிஸ்­ணவி வன்­பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெடுப் ­ப­தற்கு சிறப்புக் குழுக்கள் நியமிக் ­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சfர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். வவு­னியா பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பீர்வு பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும் நேற்று (24) மாலை வரை சந்­தேக நபர் தொடர்­பிலோ…

Read More

வவுனியாவில் அதிகமான மூடுபனி!

வவுனியா நகரில் இன்று (10) காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா பிரதேசங்களில் சாதாரண பனி நிலைமை காணப்படும் என தெரிவித்துள்ள பிரதேசவாசிகள் வழமைக்கு மாறாக இன்றைய தினம் இங்கு மூடுபனி படர்ந்துக் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Read More

வவுனியா- ஹொரவப்பொத்தானை வீதியில் கோர விபத்து: இளைஞன் மரணம்

வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் திங்கள் கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான். வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கிப் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞன் 2ஆம் கட்டை, அம்பலாங்கொட பகுதியில் பயணித்தபோது மாடு ஒன்றுடன் மோதி எதிரே வந்த ஆட்டோவுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த எச்.எம்.லஹிரு பண்டார (வயது 22) என்ற இளைஞன் மரணமடைந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வெள்ள பாதிப்பு: அமைச்சர் றிஷாத் அதிகாரிகளுக்கு உத்தரவு

வவுனியா மாவட்டத்தில், வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் (16) கைத்தொழில், வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில், அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற, வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை தொடர்பான கலந்துரையாடலின்போதே…

Read More

வடக்கு தொடருந்து போக்குவரத்து வழமைக்கு

ரத்து செய்யப்பட்டிருந்த வடக்கு தொடருந்து வழி போக்குவரத்துக்கள் இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின தொடரூந்து தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்டது. இந்தநிலையில் தடம்புரண்ட தொடரூந்து நேற்றிரவு வரை மீளமைக்கப்பட்டிருக்காத நிலையில் அஞ்சல் தொரூந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து வழித் தடத்தில் நேற்று இரவு பயணிக்கவிருந்த 4…

Read More

வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று இன்று காலை தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Read More

ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் பகுந்த சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீடும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் மயிரிழையில்…

Read More