Headlines

எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் மட்டுமே.. நிலக லங்கார தேரர்

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் –   யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்றப்பட்ட பின்னரும்  எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே. எங்களின் இன்ப துன்பங்களிலும் அவர் பங்கேற்பவர் என ஸ்ரீ பன்வௌ விகாராதிபதி நிலக லங்கார தேரர் தெரிவித்தார். வெலி ஓயா பிரதேசத்தின் பல்வேறு  கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) அமைச்சர் றிஷாட் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டு அந்த பிரதேச மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஸ்ரீ பன்வௌ பகுதியில் இடம்பெற்ற கூட்ட மொன்றில்; உரையாற்றிய…

Read More

முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன்

வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில்  சனிக்கிழமை (5) இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் எனவும், வன்னி அபிவிருத்தியில் என்னை இணைக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக்…

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More

சந்திரிக்காவுக்கு, அமைச்சர் றிஷாத் அனுப்பிய கடிதம்

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம், அப்பிரதேச மக்களும், வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் றிஷாத்…

Read More

ஜனாதிபதி தலைமையில் முஸ்லிம்கள் தொடர்பில் விசேட கூட்டம்

– அஸ்ரப் ஏ சமத் – வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லிம்கள் சம்பந்தமாக நேற்று (11) திகதி பி.ப 2.மணிககு ஜனாதிபதித் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று  நடைபெற்றது. இதில் அமைச்சா்களான  றிஷாத் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன்,  ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயா கமகே, சஜித் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியெல்ல,  ராஜித்த சேனாரத்தின, கிழக்கு முதலமைச்சா் நசீர் அஹமட், வடக்கு ,கிழக்கு ஆளுணா்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்….

Read More

முஸ்லிம்கள் தம் காணிகளில் உள்ள, பற்றைகளை துப்புரவு செய்வது காடழிப்பு அல்ல – ஜனுபர்

– பாரூக் சிஹான் – முல்லைத்தீவு பகுதியில் காடழிக்கப்படுவது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் கொண்டு வந்த பிரேரணை சக வட மாகாண சபை உறுப்பினர் ஜனுபரின் கூற்றினால் பிற்போடப்பட்டுள்ளது. மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5 மணிவரையில் நடைபெற்றிருந்தது முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது…

Read More

ஐ.நா குழு இலங்கைக்கு வருகை

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தரும் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள். இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை தேடிப்பார்க்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் விஜயம்…

Read More

அமைச்சரவையில் றிஷாத் கொந்தளிப்பு: அமைதிப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….

Read More

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்புத்தான் – சுமந்திரனின் பதிலடி

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு…

Read More