Headlines

எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட றிப்கான் பதியுதீன்

எருக்கலம்பிட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திப்பதற்கு நேற்று முன் தினம்(18) திடீர் விஜயமொன்றை மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேற்கொண்டார். எதிர்வரும் 23ம் திகதி நடைபெற இருக்கும் நிகழ்வினை பற்றியும் அன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைய இருக்கும் சகோதரர்கள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே இன்றைய விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.   

Read More

மறிச்சுக்கட்டியில் அமைச்சர் றிஷாத்!

-சுஐப் எம். காசிம் – வடபுலத்திலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பாரிய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ள போதும், நம்மைச் சார்ந்த சிலரின் போக்குகளும், செயற்பாடுகளும் அந்த முயற்சியை சிக்கலாக்கும் வகையில் அமையக்கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், மறிச்சுக்கட்டியில் மீளக்குடியேறியுள்ள மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மீளக்குடியேறும் செயற்பாடு என்பது இலகுவான காரியம் அல்ல. அவசர அவசரமாக ஒரே நாளில் மனம்போன போக்கில் செய்யக் கூடிய ஒரு முயற்சியும்…

Read More

வீடில்லாப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அணுக வேண்டும்

மோசமாகப் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் வீடில்லாப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அணுக வேண்டும்; வன்னி எம்.பிக்களுடன் இணைந்து கொழும்பில் வலியுறுத்துவேன் – றிசாத் சுஐப் எம்.காசிம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதியளித்தார். இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, நாளை பாராளுமன்றத்தில் உரிய அமைச்சர்களைச் சந்தித்து காத்திரமான முடிவுகளை மேற்கொள்வோம் என்றும், பிரதமர் ரணில்…

Read More

பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை!

விரைவில் ஆரம்பமாகும் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மடு பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற (08) நிகழ்வின் போதே வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

வவுனியா பொருளாதார மத்திய நிலையப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன்  இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்…

Read More

ஜனாதிபதியின் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதியூதீனும் பங்கேற்றிருந்தார்.

Read More

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்புவது சாத்தியமா?

– சுஐப் எம்.காசிம்  – மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது. மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும், மீன்…

Read More

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

அதிக மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

மீள் குடியேறிய மக்களின் துயர்களைத் துடைத்து வரும் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – ”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர். உலகில் வாழும் மக்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் நீர் மாசடைந்து வருகின்றது. சுத்தமற்ற நீரை குடிக்கவும், குளிக்கவும் சமைக்கவும் உபயோகிக்க முடியாது. நோய்களால் பீடிக்கப்படுவர் மக்கள். எனவே ஏழை முதல் செல்வன் வரை குழந்தை முதல் முதியோன் வரை அனைவரும் அருந்தும் நீரும்…

Read More

வவுனியா மக்கள் அமைச்சர் றிஷாத்திடம் அங்கலாய்ப்பு

-சுஐப் எம்.காசிம் – 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் வாழ்கின்ற இந்தப் பிரதேச காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை (பெர்மிட்) தராமல் தொடர்ந்தும் இழுத்தடித்து வருகின்றார்கள். நீங்களாவது இந்த விடயத்தில் கரிசனைகொண்டு எமக்கு உதவ வேண்டுமென, வவுனியா தமிழ்க் கிராம மக்கள் அமைச்சர் றிசாத்திடம் கோரிக்கை விடுத்தனர். வவுனியா தமிழ்க் கிராமங்களுக்கு கடந்த சனிக்கிழமை (07/05/2016) விஜயம் செய்த அமைச்சரிடம் மக்கள் பல கோரிக்கைகளை விடுத்து, அவற்றை நிவர்த்தித் தருமாறு வேண்டினர். மணிபுரம், பழைய மணிபுரம், சமயபுரம், கணேசபுரம்,…

Read More

இறைவன் எனக்கு, நிரம்பிய சக்தியை வழங்கியுள்ளான் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காசிம்  – சிலாவத்துறை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அவற்றை சொந்தக்காரரிடம் கையளிக்க உச்சளவிலான நடவடிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது எனவும், இது தொடர்பில் வேறு கட்சிகள் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை மட்டும் விட்டு மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சிலாவத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, சிலாவத்துறை காணிப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டக்…

Read More