Headlines

அமெரிக்காவின் நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார். அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து…

Read More

இலங்கை வான்பரப்பில் மர்மம்: மக்கள் அதிர்ச்சி!

இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு (9) மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வேகத்துடன் குறித்த ஒளி மறைந்து சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி மறைந்து சென்ற சில நிமிடங்களில் புதுவகையான நறுமணம் ஒன்றை பிரதேசவாசிகளால் நுகரக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நறுமணம் மல்லிகைப் பூவின் நறுமணத்தை ஒத்திருந்ததாகவும், இதனை நுகர்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வண்டியின் சக்கரத்தை ஒத்ததாகவும்,சிவப்பு நிற…

Read More

சவூதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம்? (வீடியோ)

பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில்தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர்.பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது. தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்துபோனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சிவெளியாகியுள்ளது.  இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லதுஇராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில்வெளியிடபட்டுள்ளது.

Read More

பறக்கும் தட்டு குறித்து, உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதில் ஒரு வாக்குறுதியாக, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால், பறக்கும் தட்டும் குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 77 சதவீதம் மக்கள், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு…

Read More

அம்பாறையில் தரையிறங்கிய மர்மப்பொருள்? – விசாரணைகள் தீவிரம்

அம்பாறையில் அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை -கோணகல பிரதேசத்தில் உள்ள வயலில், கடந்த 18ஆம் நாள் இரவு அடையாளம் தெரியாத பறக்கும் மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியதாக கூறப்படுகிறது. மர்மப்பொருள் தரையிறங்கியதாக கூறப்படும் வயலில், விசித்திரமான அடையாளங்களை கண்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, விசாரணைக்குழுவொன்று அங்கு சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோணகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பி.சிறியாவதி என்பவர் தகவல் வெளியிடுகையில், “இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு காலையில் வயலுக்குச் சென்று…

Read More