ரியோ 2016 ஒலிம்பிக் விழா இன்று ஆரம்பம்
சர்வதேச விளையாட்டு அரங்கில் உயரியதும் உன்னதம் வாய்ந்ததுமான கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31 ஆவது அத்தியாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலாகல ஆரம்ப வைபவத்துடன் இன்று தொடங்குகின்றது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடத்தில் நடைபெறும் நவீன கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா, அதன் 120 வருட வரலாற்றில் தென் அமெரிக்க நாடொன்றில் அரங்கேற்றப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஒற்றுமை, நட்புறவு, சகோதரத்துவம், புரிந்துணர்வு ஆகியவற்றின் சின்னமாக ஒலிம்பிக் விளையாட்டு…
