Headlines

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்தஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம்இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் : இலங்கை அணியில் 9பேர்

பிரேசிலில் இடம்பெறவுள்ள மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற, இலங்கையிலிருந்து 9பேர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. அனில் பிரசன்ன ஜயலத் என்பவரின் தலைமையின் கீழ் இந்த அணி அனுப்பப்பட்டுள்ளது. இவர் 100, 200 மீ. ஓட்டப் போட்டிகளிலும் நீளம்பாய்தலிலும் பங்குபற்றுகிறார். இவர் ஏற்கனவே இந்தப் போட்டிகளில் சாதனையாளராக உள்ளார். 2012இல் இலண்டனில் இடம்பெற்ற போட்டிகளில் ஒரு வெண்கலப் பதக்கத்தை தங்கள் குழு வென்றெடுத்தாக குழுத் தலைவர் ஜயலத் தெரிவித்தார். செப்டெம்பர் 7இலிருந்து 18 வரை இடம்பெறும் இந்தப்…

Read More

சுதந்திர தின விழாவில் பிரேசில் அதிபருக்கு எதிராக கூச்சல்

பிரேசில் அதிபராக இருந்த டில்மா ரூசோப் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மைக்கேல் டெமர் புதிய அதிபராக கடந்த வாரம் பதவியேற்றார். இந்த நிலையில் பிரேசில் சுதந்திர தினவிழா நேற்று தலைநகர் பிரேசிலியாவில் நடந்தது. அதையொட்டி ராணுவ அணிவகுப்பு மரியாதை நடந்தது. விழாவில் பங்கேற்ற அதிபர் மைக்கேல் டெமர் திறந்த ஜீப்பில் ஏறி அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மைக்கேல் டெமரின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக ‘ஓ’ வென…

Read More

விளையாட்டுத்துறை அமைச்சு மீது சேறுபூச திட்டம்!

ஒலிம்பிக் போட்டிக்கு 40 பேர் சென்றமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு மீது சேறு பூசப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான 40 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பி க்கிற்கு சென்றதாகவும், இதில் விளையாட்டுக்குழுவிற்கு தேவையான அதிகாரி கள் மற்றும் வீரர்களே உள்ளடங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் இதை விட அதிகமானவர்கள் சென்ற சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாகவும்,ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதவர்கள் விளை யாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சேறு பூசுவதற்காக…

Read More

நிறைவடைந்தது ஒலிம்பிக் – அமெரிக்காவுக்கு முதலிடம்!

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில்…

Read More

இஸ்ரேலுக்கு எதிரான போட்டி – பலஸ்தீன கொடியை ஏந்திய, ஸ்காட்லாந்து ரசிகர்கள்

கிளாஸ்கோ செல்டிக் அணி மற்றும் இஸ்ரேலின் ஹபோயல் பீர் சேவா அணிகளுக்கு இடையேயான காலபந்து போட்டியில் ஃபலஸ்தீன் கொடியை ஏந்தி ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டி துவங்கும் முன்பு ஃபாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஃபலஸ்தீன் கொடியினையும் அந்-நக்பா (பேரழிவு) குறித்த செய்திகள் அடங்கிய நோடீஸ்களையும் விநியோகம் செய்துள்ளனர். நக்பா என்பது 1948 இல் நிகழ்ந்த இஸ்ரேல் உருவாவதற்கு காரணமாகவும் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற…

Read More

பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி

பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து…

Read More

200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார், உசேன் போல்ட்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில்…

Read More

ஹாட்ரிக் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

ரியோ ஒலிம்பிக்கில் எந்த நாடு எத்தனை பதக்கம் வெல்கிறது என்பது ஒரு கணக்கு என்றால். 100மீ பந்தயத்தில் போல்ட் எத்தனை நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வெல்வார் என்பது தான் மற்றோரு கணக்கு. உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? தொடர்ந்து மூன்றாவது முறையால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்ற கேள்விகளோடு களமிறங்கினார் போல்ட். அனைவரும் எதிர்பார்த்த 100 மீட்டர் போட்டி தூரத்தை 9.81 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த…

Read More

ரியோ டி ஜெனீரோவில் பதற்றம்

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (10) டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது  சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி…

Read More

ரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள சீனா  5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்  என 13 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை அவுஸ்திரேலிய, இத்தாலி போன்ற நாடுகள் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன. இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையிலான…

Read More

ரியோ ஒலிம்பிக் ; இலங்கைக்கு தொடரும் ஏமாற்றம்

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று (8) இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்ற இலங்கை, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும்  தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் பழு தூக்கல் போட்டியில் பங்கேற்ற என்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரிய போட்டியை நிறைவுசெய்யாமல் வெளியேறினார். இந்நிலையில் 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் மங்கள சமரகோன் 50 ஆவது இடத்தை பெற்று போட்டியிலிருந்து வெளியெறினார். இதேவேளை ஒலிம்பிக் ஜுடோ போட்டியில் பங்கேற்ற ரிப்பியல்லகே சமீர  9 இடத்தை பெற்று…

Read More