Headlines

கடுவலையில் ஐஸ் மழை!

– ஆர்.கிறிஷ்ணகாந் – கடு­வலை பிர­தே­சத்தில் நேற்று (25)  பிற்­பகல் ஐஸ் மழை பெய்­துள்­ளது. நேற்று பிற்­பகல் வேளையில் கொழும்பு மற்றும் அதனை சூழ­வுள்ள பிர­தே­சங்­களில் கடும் மழை­யு­ட­னான கால­நிலை நில­வி­யி­ருந்­தது. பிற்­பகல் வேளை இருள் சூழ்ந்­த­வொரு வானத்­தினை அவ­தா­னிக்க கூடி­யதாக இருந்­தது. இதனால் கொழும்பு நகர் பிர­தேசம் முழு­வ­திலும் சற்று இருள் சூழ்ந்­தி­ருந்­தது. பின்னர் கடும் காற்­றுடன் ஆரம்­பித்த மழை­யுடன் கடு­வலை பிர­தே­சத்தில் ஐஸ் மழை பொழிந்­த­தனை அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­துள்­ளது. மேலும் கொழும்பின் ஏனைய…

Read More

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (8) மழை பெய்யும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதாவது, மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானியல் அதிகாரி நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மின்னல் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

நாட்டில் இன்று ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் சகல பகுதிகளிலும் வாழ்கின்ற பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Read More

தொடரும் அடை மழையால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக 18 ஆயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக செய்கை சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமத்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது. கிரான், வெல்லாவெளி, கொக்கடிச்சோலை…

Read More

மன்னாரில் வெள்ளம் : போக்குவரத்து பாதிப்பு

– வாஸ் கூஞ்ஞ – மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  மழை காரணமாகவும் வெளி மாவட்டங்களிலிருந்து உள்நோக்கி வரும் மழைநீர் காரணமாகவும் மன்னார் பகுதியில் பல வீதிகளிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாந்தை மேற்கு பகுதியிலுள்ள பாலியாறு பகுதியில் வீதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வீதிகளை மேவி பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் இப் பகுதியில் வெள்ளாங்குளம் பகுதியில்…

Read More

வங்கக்கடலில் காற்றழுத்தம்! இலங்கைக்கு வெள்ள ஆபத்து

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று,  இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின்…

Read More

மொனராகலையில் குளமொன்று உடைப்பெடுத்தது! பொதுமக்கள் அவசரகதியில் வெளியேற்றம்

மொனராகலையில் கடும் மழை காரணமாக குளமொன்று உடைப்பெடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அப்பிரதேசத்திலிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்றாகும். கடும் மழைகாரணமாக இங்குள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள மடுல்லை பிரதேசத்தை அண்மித்த உடுமுல்லை கிராமத்தின் அருகில் அமைந்திருந்த குளத்தின் அணைக்கட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது. அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் தற்போது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு…

Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்கிடையிலான ரயில் பாதையின் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மலையகத்தில் கடும் மழை

– க.கிஷாந்தன் – மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக மழை காரணமாக  சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கும்…

Read More

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

– எம்.எம்.ஜபீர் – அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஏற்படட காலநிலைமாற்றத்தினால் பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 6ஆம் கொளனி பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரயாணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால் பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும்…

Read More