பாதுகாப்பு செயலாளரின் யோசனையை நிராகரித்த ஜனாதிபதி?
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்திருந்தார். எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, வார இறுதி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படாது.அவ்வாறு…
