Headlines

சாலாவ வெடிப்பை வீடியோ செய்த மஹிந்த

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர்….

Read More

ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட, நான் தயாரில்லை – மைத்திரி திட்டவட்டம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்காக கோட்டாபயவின் பெயரை முன்மொழிவதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறானதொரு யோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதுஇவ்வாறு இருக்க, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட தான் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. நேற்று -06- இரவு அரசாங்கத்தைப்…

Read More

வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…

Read More

முகம்மது அலிக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹிந்த

உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74வது வயதில் காலமானதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கலை அவர் தனது உத்தியோகபூர்வமான டுவிட்டர் தளத்தினூடாகவே வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் அந்த இரங்கல் செய்தியில், “முகம்மது நபியை அனைவரும் ஒரு மிகப்பெரிய மற்றும் தலை சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக மாத்திரம் நினைவில் கொள்வதில்லை. மாறாக அவர் ஒரு உத்வேகத்தை தூண்டும் மனிதநேயம் மிக்கவர். அதனால் தான்…

Read More

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்

மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதில்லை என்று அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவை அடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்ட இராணுவ கொமாண்டோக்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. மகிந்த ராஜபக்சவுக்கு, 104 இராணுவக் கொமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், முதற்கட்டமாக கடந்த மே 2ஆம் நாள், 52 இராணுவத்தினர் திருப்பி அழைக்கப்பட்டனர். மீதமுள்ள 52 இராணுவ கொமாண்டோக்களும் இன்று விலக்கிக் கொள்ளப்படவுள்ளனர். இதையடுத்து,…

Read More

ஜப்பான் செல்கிறார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜுன் மாதம் 09ஆம் திகதி, ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளார். அவருடன், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சிலரும் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர் சிலரால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர் மேற்கொள்ளும்…

Read More

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1958ல் நாட்டில்…

Read More

ஜப்பானுக்கு செல்லும் மஹிந்த

உகண்டாவுக்கு அண்மையில் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வசித்து வரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவிற்கு நெருக்கமானவர்கள், முன்னாள் ஜனாதிபதியை ஜப்பானுக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர்கள் விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை ஜப்பானுக்கு அழைத்திருந்தனர். ரோஹித்த அபேகுவர்தன…

Read More

பிரதமரை விட மஹிந்தவின் பாதுகாப்பு அதிகமானது!

பிரதமரின் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமானது வழங்கியுள்ளது. அந்தவகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இது தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பகரமான கதைகளை பரப்பிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

மஹிந்தவின் வெற்றிவிழா நாளை குருநாகலில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை.  இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை 19ஆம் திகதி குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர். எனினும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read More

உகண்டாவில் சகல சமூக வலைதளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது

உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில்…

Read More

இன்று உகண்டா நோக்கி பயணமாகியுள்ள மஹிந்த ராஜபக்ச!

பாராளுமன்ற உறப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று (11) அதிகாலை உகண்டா நோக்கி பயணமாகியுள்ளார். உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியான யொவேரி கஜுடா முசெவெனி 6வது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்பதை முன்னிட்டு இதில் கலந்து கொள்ள மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மஹிந்த அங்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த, தனசிறி அமரதுங்க உள்ளிட்டோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More