Headlines

நாம் முட்டாள்கள் கிடையாது! டிலான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

மஹிந்த ஆட்சியில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.

 ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார். எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள்…

Read More

மஹிந்தவை ஒதுக்க மாட்டோம் – அமைச்சர் நிமல்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு அமை­வாக செயற்­ப­டு­கின்றார். அதற்­காக அவரை ஒதுக்கிச் செயற்­படும் நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்­சியும் இல்லை. எனவே பேச்­சு­வார்த்தை ஊடாக அவ­ரது பிரச்­சி­னையை அணுகி அதற்­கான தீர்­வொன்றை எட்­டவே நாம் முயற்­சிக்­கின்றோம் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.

Read More

மஹிந்த உகண்டாவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாத இறுதியில் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டாவின் பிரதியமைச் சர் ஒருவரின் அழைப்பினை ஏற்றே மஹிந்தராஜபக்ஷ அந்நாட்டுக்கு பயணிக்கவுள் ளார். அவருடன் காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த மற்றும் உதித்த லொக்கு பண்டார ஆகியோரும் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் டுபாய் வழியாகவே உகண்டாவின் கம்பாலா நகருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

மஹிந்தவுக்கு ஆட்சிக்கு வரமுடியாது

மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு மீண்டும் நாட் டில் ஆட்­சிக்கு வர முடி­யாது. அர­சி­யலில் ஈடு­ப­டலாம் எனத் தெரி­வித்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க, தனிப்­பட்ட ரீதியில் மஹிந்த மீது எனக்கு மதிப்­புள்­ளது. ஆனால் அவ­ரது குடும்ப ஆக்­கி­ர­மிப்பு அர­சியல் கொள்­கை­களை எதிர்க்­கின்றோம் என்றும் குறிப்­பிட்டார்.

Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதி காலி – தர்மபால பூங்காவில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

மஹிந்த அணியில் எனக்கு எதிராக சூழ்ச்சி: சஜின்வாஸ்

எனக்கு எதி­ராக பாரிய சதித்திட்டம் ஒன்று கூட்டு எதிர்க்கட்சி பக்கம் இருந்து முன்­னெடுக்­கப்­ப­டு­கிறது. அரச சாட்சியா­க மாறுவதற்கு நான் குற்­ற­வா­ளியல்ல. பாம்பின் கால் பாம்­ப­றி­வது போன்று மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் கட­மையை தவிர வேறு ஒன்றும் நான் செய்யவில்லை என்று முன்னாள் வெளிவிவகார கண்­கா­ணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ் குண­வர்­த் தன தெரி­வித்தார். ஊட­கங்கள் எனக்கு எதி­ராக பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வி­த­மான அடிப்­படை தன்­மை­யு­மின்றி முன்­வைக்­கின்­றன. அவ்­வாறு பாரி­ய­ள­வி­லான குற்­றத்தை நான் செய்­தி­ருந்தால் என்னை…

Read More

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கொன்றை நேற்று வாபஸ் (5) பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சில் அனுட்டானங்களுக்கான துணிகளை விநியோம் செய்யும் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தார். பொதுமக்களின் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து குறித்த துணிவிநியோக பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பெப்ரல் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தது. இது…

Read More

மஹிந்தவிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியாது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட முடியாத இராணுவப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்க முடியாது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவை எவ்வாறு அழைப்பது : துமிந்த திசாநாயகவுக்கு சந்தேகம்

– ஆர்.யசி – மஹிந்த ராஜபக்ஷவை ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (3) கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கட்சியின் கொள்கையை மீறிய நபர்களை விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்….

Read More

மஹிந்தவால் தான் ஆட்சிக்கு வந்தோம், அவரை பாதுகாப்பது எமது கடமை : சபையில் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க  வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  சபையில்  தெரிவித்தார். உலகில்  எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும்  இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.  ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின்  பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி.,  முன்னாள்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  இராணுவப் பாதுகாப்பு  நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம்…

Read More