Headlines

ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)

நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில்  தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More

“எனது கழுத்தை அறுத்து உயிர்துறப்பேன்” – மஹிந்த

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி…

Read More

புதிய சட்டமூலத்தின் நோக்கம் பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதே!

பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே அரசாங்கத்தினால் புதிய ஒழுக்க விதிகளை உள்ளடக்கி, சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து ஒழுக்க விதிகள் உள்ளடக்கிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராக இருகிறது.அது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், தேரர்களுக்கிடையிலும் பொதுமக்களுக்கிடையிலும் பாரிய எதிர்ப்பு உருவெடுக்குமென அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை,பௌத்த…

Read More

கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி எதுவும் தெரியாது: மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் 9 கட்சிகள் இணையவுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியை ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் எந்தவொரு நபரும் தன்னுடன் இதுவரை பேசவோ அல்லது அபிப்பிராயங்களோ கேட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள மஹிந்த, வேலையற்ற ஒரு சிலர் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை!– மஹிந்த ராஜபக்ச

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவர்களின் உரிமையாகும். அதனை எந்த வகையிலும் பிழையாக கருத முடியாது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்காதவர்கள் பற்றியே பிரச்சினை காணப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு தரப்பும் பிளவடைந்திருக்கப் போவதில்லை. எதிர்க்கட்சி எதிர்க்கட்சியேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில்…

Read More

தவறிழைத்தோர் தனது குடும்பப் பெயரைக் கூறித் தப்பிக்க முயற்சி –

கடந்த காலங்களில் தவறிழைத்த பிரிவினர் தமது குடும்பத்தினரின் பெயரைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தினர் மீது தற்போது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அவன்கார்ட் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும்…

Read More

செலவைக் குறைத்ததால் 1400 மில்லியன் எஞ்சியது

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார். அங்கு அவர் தெரிவித்ததாவது; 2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3…

Read More

தவறை ஒப்புக் கொண்ட மஹிந்த!

இலங்கையின் ஜனாதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில் தவறுகள் இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது ஒப்புக்கொண்டுள்ளார். தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகஉறுப்பினர்கள் இழைத்துவிடக்கூடாது என்றும் மகிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கினார். முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். நல்லிணக்கம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் கேட்கும் எல்லாவற்றையும் கொடுப்பதல்ல. அதேபோல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில்…

Read More

முதற்தடவையாக பாராளுமன்றில் உரையாற்றும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச முதற்தடவையாக நாடாளுமன்றில் தற்சமயம் உரை நிகழ்த்துகிறார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்திலே அவர் உரை நிகழ்த்துகிறார்.

Read More

மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை விடமாட்டோம்

அர­சாங்­கத்­தினால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­ 725 பாரிய ஊழல் மோச­டிகள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த 725 மோச­டி­க­ளுடன் முன்னாள் ஜனா­தி­ப­தியின் குடும்­பத்­தாரும் உற­வி­னர்­களும் மறை­மு­க­மாகத் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்ற அதே­வேளை இவற்றில் 25 மோச­டி­களில் மஹிந்த குடும்­பத்­தாரின் நேரடித் தொடர்­புகள் இருக்­கின்­றன. இதற்­கான ஆதா­ரங்­கள் உள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நெல்சன் மண்­டே­லா­வா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை லீகுவான் கி வாகவும் இன்று வர்­ணித்துக் கொண்­டி­ருக்­கின்ற சர்­வ­தேசம் மைத்­தி­ரி­பா­லவின் ஜன­நா­யக ஆட்­சி­யையும்…

Read More

மஹிந்த எங்கே? ஏன் வர­வில்லை : சபையில் சிரிப்­பொலி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவா­தத்தில் கலந்து கொள்­ள­வில்லை என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார ஜய­மகே நேற்று பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பினார். நளின் பண்­டார எம்.பி. இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தை­ய­டுத்து ஆளும்­கட்­சி­யினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்­டினர். இதே­வேளை மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரும் கூச்­ச­லிட்­டனர். அத்­துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்­தி­ருந்­தது. வரவு–செலவுத்…

Read More

மஹிந்தவின் மாதாந்த வருமானம் 4,54,000 ரூபா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தையும், முன்னாள் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் படி மாதாந்தம் 4 லட்சத்து 54,000 ரூபாவை வருவாயாக பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ச, ஓய்வூதியமாக மாதாந்தம் 3 லட்சத்து 49 ஆயிரமும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் பெற்று வருவதாகவும் சம்பளப்…

Read More