Headlines

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில், யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம்…

Read More

பாடசாலை மாணவர்கள் இருவரைக் காணவில்லை

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் (14) முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தரம்-9 மற்றும், தரம்-8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு திரும்பாததனால் இவர்களை பெற்றோர் தேடியுள்ளதுடன் இறுதியில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்சமயம் குறித்த மாணவர்களை தேடும் பணியில் பொலிஸார்…

Read More

ஜனாதிபதிக்கு அருகிலிருந்து காணாமல்போன மாணவி யார்? கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம்

ஜனாதிபதிக்கு அருகில் நிழற்படத்தில் நிற்கும் மாணவி தனது காணாமல்போன மகளென குறித்த மாணவியின் தாயார் தமக்கு முறைப்பாடு செய்திருக்கிறார். எனவே அவரை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்.மணிவண்ணன் இது விடயம் தொடர்பாக சுற்றுநிருபமொன்றை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இச்சுற்றுநிருபத்துடன் குறித்த மாணவி மற்றும் சக…

Read More

கட­லுக்கு சென்ற மீன­வர்கள் இருவர் 20 நாட்­க­ளா­கியும் வீடு­ சே­ர­வில்லை

திரு­கோ­ண­மலை மாவட்டம் திருக்­க­டலூர் மற்றும் பள்­ளத்­தோட்டம் பகு­தி­களைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கட­லுக்குச் சென்ற நிலையில் இன்­றுடன் 20 நாட்­க­ளா­கியும் தமது வீடு­க­ளுக்கு வந்து சேர­வில்லை. இவர்கள் கட­லுக்குச் சென்ற பட­­கினை கடலில் கண்டு மீட்ட போதும் இவர்­களின் தகவல் தெரி­யாத நிலையில் பெற்றோர் தேடி வருகின்றனர்.

Read More

வவுனியாவில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் (வயது 13) என்ற சிறுவன் 25ஆம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் குறித்த சிறுவன் பாடசாலை சென்று கல்வி கற்க மாட்டேன் எனவும் தான் வேலைக்கு செல்லப் போவதாவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த  சிறுவன் தொடர்பில் தகவல்…

Read More

அரபுக் கல்லூரி மாணவரை காணவில்லை!

– அல்ஹாபிழ் M.R.M  ரிஷாத் – B 34/6, kotegoda, hemmathagama என்ற முகவரியை வசிப்படமாகக் கொண்டவரும் தேசிய அடையாள அட்டை இலக்கம்:  960953967 V மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் ஷரீஆப்பிரிவில் ஐந்தாம் தரத்தில் கற்கும் மேற்படி மாணவரை கடந்த ஐந்து நாட்களாகக் காணவில்லை. மெலிந்த உடற் தோற்றமும்,பொது நிறமுமுடையவர்.இலகுவான தாடியும் வைத்தருப்பவர்,அதிகமாக வெண்ணிற அறப் தோப் அணிந்திருப்பார். இவரைக் கண்டவர்கள், அல்லது விசாரித்தறிந்தவர்கள் அவரைக் காணாது கவலையால் துயருறும் தந்தை,மற்றும் சகேதரர்களுடைய தொலைபேசி இலக்கங்களுடன்…

Read More

காணாமல் போன மகிந்தவின் மோதிரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த மோதிரம் ஒன்று நேற்று (28) காணாமல் போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கல்யாண வைபவம் ஒன்றில் வைத்து இந்த மோதிரம் காணாமல் போனது. இந்தநிலையில் கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது. எனினும் குறித்த மோதிரம் சில விநாடிகளில் ஹோட்டல் பணியாளரால் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்த இடம்ஒன்றில்…

Read More

காணாமல் போயிருந்த பிக்குகள் கண்டு பிடிப்பு

கடந்த 20 மணித்தியால காலப்பகுதியாக அரலகன்வில கந்தேகம காட்டு பகுதியில் காணாமல் போயிருந்த நான்கு இளம் பிக்குகள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் பிக்குகள் காணாமல் போயுள்ளதாகவும் அதற்கு பின்னர் இவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பின்னர் இவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காமையினால் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்….

Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின்…

Read More

வயது 14 சிறுமியைக் காணவில்லை

– அப்துல்லாஹ் – வீட்டிலிருந்த 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென அவளது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா ஷிரோமினா (வயது 14) என்ற சிறுமியே செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார் என்று பெற்றோர் முறையிட்டுள்ளனர். சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளார். தொழிலுக்காகச் சென்ற பெற்றோர் வீடு திரும்பிய போது சிறுமி வீட்டிலிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து…

Read More