Headlines

காலி கூட்டத்தில் மஹிந்த

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு செல்வதாக அறிவித்துள்ள…

Read More

பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி

ஊழியப் படையினரின் பங்களிப்பு பெறுமதி வழங்கும் தினமாக இன்றைய மே தினம் கருதப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில்; உழைக்கும் மக்கள் முழு சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைக்கு நன்றி பாராட்டும் நோக்கில் மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு பெறுமதி வழங்கும், அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும், அது தொடர்பிலான ஆக்கபூர்வமாக ஊடாடல்களை மேற்கொள்ளும் ஓர் தினமாக மே தினம்…

Read More

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சிலவற்றை மூடுவதற்கு நேரிடுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் சில வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நேரிடும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மாளிகாவத்தை பிரதேசத்தில், பிரதீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்தியிலிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையான வீதிகள் மூடப்படவுள்ளன. பிற்பகல் ஒரு மணிமுதல்…

Read More

அமைச்சர் றிஷாதின் மேதின செய்தி

– ஊடகப் பிரிவு – உலகம் முழுவதிலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மே 1 ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டடுகின்றனர். இன்றைய தினத்தில் இலங்கை மக்களாகிய நாமும் இணைந்து கொண்டு அந்தத் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் சுரங்கத் தொழிலாளர்கள் நடாத்திய போராட்டத்தின் விளைவே தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு…

Read More

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

மே தினக் கூட்ட பாதுகாப்பிற்கு 5000 பொலிஸார் கடமையில்!

மே தினக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மே தினக் கூட்டங்கள் மற்றும் மே தின பேரணிகள் போன்றவற்றுக்கான பாதுகாப்பிற்காக இவ்வாறு 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெறும் மே தினக் கூட்டங்களுக்காக 3100 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மோட்டார் போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டங்களின்…

Read More

பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைவு!

சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறுமுகம் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபா கணேசன் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்…

Read More

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் : ஜனாதிபதி

இம்முறை நடைப்பெறவிருக்கும் மே தின ஊர்வலங்களுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது தொடர்பில் தமக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும், காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணியில் கலந்து கொள்பவர்களை…

Read More

மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

எதிர்வரும் மே தினத்தின் பின்னர் மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிக்கு விசுவாசமாக செயற்படும் தரப்பினர் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதேவேளை, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(smr)

Read More

இம்முறை எவருக்கும், எந்த மன்னிப்பும் கிடையாது

காலி, சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சியில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திசாநாயக்க, ‘இதற்கு முன்னரும், கட்சிக்கு…

Read More

அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாணசபை அமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்கவுள்ளார். மேலும், இந்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக அனைத்து மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படவுள்ளதோடு, மேதினத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

பொது எதி­ர­ணியின் மேதின கூட்டம் நார­ஹேன்­பிட்­டியில்

உழைக்கும் மக்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்­தியும் , நாட்­டிற்கு ஜன­நா­யக ஆட்­சியை கோரியும் கூட்டு எதிர் க்கட்­சியின் மே தின கூட்டம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெறும். ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் அனை­வரும் கூட்டு எதிர் கட்­சியின் மே தின கூட்­டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

Read More