Headlines

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஹுஸைன்- மைத்திரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

Read More

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு…

Read More

ஜனா­தி­பதி, பிர­தமரை இன்று சந்­திக்­கிறார் செயிட் அல் ஹுசைன்

இலங்­கைக்கு நான்கு நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை இன்­றைய தினம் (9) சந்­திக்­க­வுள்ளார். இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னு­டைய இலங்­கை விஜ­யத்தின் இறுதி நாள் இன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­திக்­க­வுள்ளார்….

Read More

குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி – மைத்திரி

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஸ்ரீ போதிராஜா விகாரையில் ஆரம்பமான நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றிய பொழுதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்…

Read More

பாகிஸ்தான் செய்த உதவிகளை மறக்கமாட்டோம் – மைத்திரி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். மேலும், யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகளவான உதவிகளை வழங்கியதாக நினைவூட்டிய ஜனாதிபதி அதை தாமும் தமது நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மனித உரிமைகள்…

Read More

ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட தீர்மானம்

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திடவுள்ளது. இந்த முக்கியமான பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு,  அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவார். பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுதலை ஒரு மனித உரிமை மீறலாக இந்தப் பிரகடனம் வரையறுப்பதுடன், இதனை ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதும் வகையில் சட்டங்களை வகுக்கவும் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது….

Read More

ஜனாதிபதி முன்னிலையில் றிஷாத் பதியுதீன் விடுத்த சவால்

– அமைச்சரின் ஊடகப்பிரிவு – வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முன்னையிலையில் இந்த சவாலை ரிசாத் பதியுதீன் மிக ஆக்ரோசமாக விடுத்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சபையில் மிக ஆக்ரோசமாக…

Read More

செலவைக் குறைத்ததால் 1400 மில்லியன் எஞ்சியது

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெளிவூட்டினார். அங்கு அவர் தெரிவித்ததாவது; 2014 ஆம் ஆண்டு வைபவங்கள் மற்றும் கூட்டங்களுக்காக 335 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 34 மில்லியனே ஜனாதிபதி செயலகத்தின் செலவாகும். 301 மில்லியன் குறைவடைந்துள்ளது. மரணங்களின் போது அனுதாபம் தெரிவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ள அதேவேளை, 2015 ஆம் ஆண்டு 3…

Read More

ஊவா மாகாண சபை அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நேற்று பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான சமரவீர ஊவா மாகாண சபை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் 15 வருடங்கள் ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.

Read More

பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கருணாரத்ன பரணவிதான இதற்கு முன்னர் உள்ளூராட்சி மற்றும்  மாகாண சபைகள் பிரதி அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More