Headlines

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்

இந்தியா தமிழக தலைநகர் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் – மைத்ரி” என தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் இதுவரையில் 269 பேர் உயிரிழந்ததுடன் இலட்சக் கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது…

Read More

மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு

– முனவ்வர் காதர் – மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு நேற்று (03) பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இதில் வடக்கில் சுமார் 20000 க்கு மேற்பட்ட தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளதால் வடக்கில் தொழில்பேட்டைகளை அமைக்க எனது அமைச்சினால் உங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஐனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கு நாடுபூராகவும் சுமார் 44000 க்கு மேற்பட்ட தொழில்பேட்டைகளை அமைக்கவுள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு அமைச்சர் வருகை…

Read More

ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பில் ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனை­வ­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார். 2016ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முத­லா­வது வாக்­கெ­டுப்பு நேற்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது வர­வு­செ­லவு திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்­துள்­ள­தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு…

Read More

நிறைவேற்று அதிகாரங்களை மைத்திரிபால குறைப்பார்: அமெரிக்கா நம்பிக்கை

இலங்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சமந்தா பவார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அதிகாரக் குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சோதனைகளில் இருந்து மீண்டு சமநிலையை பேண ஜனாதிபதி மைத்திரிபால விரும்புவதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.

Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அஞ்சப் போவதில்லை. 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தெளிவானதும்…

Read More

ஜனாதிபதி பிரான்ஸ் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ள இன்று பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள் மற்றும் அதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகியன இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும். காலநிலை மாற்றம் தொடர்பில் 1992 ஆம் ஆண்டு ஐ.நா சபையினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இடம்பெறும் 21ஆம் மாநாடு இதுவாகும். இம் மாநாட்டில் ஐ.நா சபையின் 80…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு நோபல் பரிசு?

மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருகின்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கருத்தொருமைப்பட்டு தேசிய அரசு அமைக்கப்பட்டு நாட்டின் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் எமக்கு இதுவரை காலமும்…

Read More

வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக அமைச்சர் றிஷாத் மீண்டும் நியமனம்

வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக மீண்டும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக இருந்ததுடன் பல அபிவிருத்தித்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். நல்லாட்சி அரசாங்கத்திலும் 100 நாள் திட்டத்திலும் வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மீண்டும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால்…

Read More

மோல்டா எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்

நான்கரை லட்சத்துக்கும் குறைவான சனத்தொகையை கொண்ட அழகிய தீவே மோல்டா. இந்த மோல்டா தீவிலேயே இம்முறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மாத்திரமன்றி, பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற 53 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் முக்கிய இரண்டு பிரதிநிதிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்த மாநாடு மோல்டா தீவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. மோல்டா தீவை  எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்…

Read More

சிங்களவர்களை பற்றி நல்லாட்சி அரசு எதனையும் பேசுவதில்லை: ஞானசார தேரர்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் பலருக்கு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாரிய தேவை இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பிரச்சினைகள் என்பது சிறுபான்மை இனத்தவருக்கு மாத்திரம் இருப்பதில்லை சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி நல்லாட்சி அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை. புத்தசாசனத்திற்கு அமைச்சர்கள் இல்லை. பொறுப்பான…

Read More

அரச நிறுவனங்களில் மின்சார முகாமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்!

தனியார் துறைகளை போன்று அரச நிறுவனங்களிலும் மின்சக்தி, எரிசக்தி முகாமைத்துவ பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய சக்தி ஆற்றலுக்கான விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்சக்தி, எரிசக்தி துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்களுக்கு அரச துறை மாத்திரமன்றி, தனியார் துறையினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன்,…

Read More

வைத்தியசாலைக்கு தனியாகச் சென்ற ஜனாதிபதி

சிகிச்­சைக்­காக கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குண­வர்­த­னவை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பார்­வை­யிடச் சென்றபோது பிடிக்கப் பட்ட படமே இது. இதன்போது அவர் பாது­காப்பு பிரி­வி­னரை அழைத்துச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More