Headlines

தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிப்பு

சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு

கல்முனை – சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

துபாயில் பெரும் தீ விபத்து. இரு 5 மாடி கட்டிடங்கள் சாம்பல் (வீடியோ & படங்கள்)

துபாயின் தேரா பகுதியில் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்…

Read More

கனடாவில் பள்ளி வாயலுக்கு தீ வைப்பு

கனடாவின் தலைநகரிலுள்ள “மஸ்ஜிதுல் ஸலாம்” எனும் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிவாசலினுள் எவரும் தங்கியிருக்கவில்லை. எனினும் இந்த தீ வைப்பு சம்பவத்தினால் பள்ளிவாசல் உடமைகள் முற்றாக எரிந்து விட்டதாகவும், இதன்மூலம் பள்ளிவாசலுக்கு சுமார் 12 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர். தீ வைப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் இது “பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக” இருக்கலாம் என பள்ளிவாசல் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

Read More