Headlines

துபாய் விமான தீவிபத்துக்கு விமானத்தின் சக்கரங்கள் தரை இறங்கும்போது செயல்படாததே காரணம்

துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவன விமானம் தரைஇறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. பயணிகள் அவசரகால வழிகளில் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியானார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி துபாய் விமான போக்குவரத்து ஆணையத்தின்…

Read More

அரச அலுவலகங்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸ் பிரதமரின் திடீர் விஜயம்!

துபாயின் அமீ­ரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபா­யி­லுள்ள அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு மேற்­கொண்ட திடீர் விஜ­யத்­தின்­போது, உயர் அதி­கா­ரிகள் பலர் அலு­வ­லங்­களில் இல்­லா­தி­ருப்­பதைக் கண்­ட­றிந்­துள்ளார். இதை­ய­டுத்து 9 சிரேஷ்ட அதி­கா­ரிகள் உட்­பட அதி­கா­ரிகள் பலரை பணி­ய­லி­ருந்து ஓய்வு பெறு­மாறு அவர் உத்­த­ர­விட்­டுள்ளார். 65 வய­தான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் பதவி வகிப்­ப­துடன்,  துபாயின் அமீ­ரா­கவும் (ஆட்­சி­யாளர்) விளங்­கு­கிறார். கடந்த ஞாயி­றன்று அவர் துபா­யி­லுள்ள அரச…

Read More

குழந்தையை விற்க முயன்ற தாய் நாடு கடத்தப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழைந்தையை வாங்கும் நபராக சென்று பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையினால் குழந்தையை விற்க முயன்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சார்ஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

Read More

துபாயில் முதன் முறையாக செயற்கை மழைக்காடு-கடற்கரையுடன் ஓட்டல்

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது. எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அதில் மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஓட்டலுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளன. இந்த அதி நவீன ஓட்டல் ரூ. 2300 கோடி செலவில் கட்டப்பட்டு…

Read More

தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய இஸா முஹம்மத்

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹம்மத் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.  இச்சம்பவம் நேற்று (3) இடம்பெற்றது.

Read More

ஈரானை புறக்கணிக்கும் அரபுநாடுகள்

ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. இது தவிர பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சவூதி அரேபிய பாணியில் ஈரானை புறக்கணிக்க தீர்மாணித்துள்ளது. பஹ்ரைனில் இருக்கும் ஈரான் ராஜதந்திர அதிகாரிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Read More

துபாயில் பெரும் தீ விபத்து. இரு 5 மாடி கட்டிடங்கள் சாம்பல் (வீடியோ & படங்கள்)

துபாயின் தேரா பகுதியில் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்…

Read More