Headlines

‘ஆசிரியையின் வாயை மூடியது தவறு’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு, மஹாநாம வித்தியாலயத்தின் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன், குறித்த ஆசிரியைக்கு நட்டஈடு வழங்குமாறும், பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலங்கை அரசியல் அமைப்பில் 12.1 உறுப்புரை மற்றும் 14.1 உறுப்புரையில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12….

Read More

நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின்…

Read More

புஸ்ஸலாவை இளைஞர் மரண வழக்கு ஒத்திவைப்பு

புஸ்ஸலாவை – ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கம்பளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சாந்தனி மீகொட, நேற்று உத்தரவிட்டார். மேலும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தின் சிறைசாலையை பார்வையிட நீதவான்,  எதிர்வரும் 30ஆம் திகதி விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

யோசித்தவின் மனு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி…

Read More

பாரத லக்ஷ்மன் கொலை: தீர்ப்புக்கெதிராக மூவர் மேன்முறையீடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டு மனுவை முன்வைப்பதற்காக தமது சட்டத்தரணிகள் ஊடாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தமது மனுவை ஒப்படைத்துள்ளனர். அநுர துஷார டி மெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், சரத் பண்டார, ஆகியோரே…

Read More

பாலித்தவிற்கு நீதவான் எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும நீதிமன்றில் ஆஜராகாமையினால் மத்துகம நீதிமன்ற பிரதான நீதவான் வசந்த கொசல சேனாதிர கடுமையாக எச்சரித்துள்ளார். நாடாளுமன்றம் என்பது சட்டத்தை உருவாக்கும் இடமாகும் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் என நீதவான் தெரிவித்துள்ளார். சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்தயே சட்டத்தை மதிக்கவில்லை என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார். பாலித்தவின் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு நீதவான் பிடியானை…

Read More

எவன்கார்ட் ; இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எவன்கார்ட் விவாகரம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 5 திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காலி நீதவான் நிலுபுலி லங்காபுர  குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.  மேலும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும்  எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும்  நீதவான்  உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த…

Read More

இசுறுபாயவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யத்தடை

வைத்தியர்களின் பிள்ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று பரிசீலனை செய்யப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் வாதிடுகையில், தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்…

Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

மனிதக்கொலை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கு நுவரெலியா மேல்  நீதிமன்றம் இன்று (09) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவினை நுவரெலியா மெல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க பிறப்பித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு தலவாக்கலை டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாரத லக்ஸ்மன் கொலையின் இறுதி தீர்ப்பு – பலத்த பாதுகாப்பில் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் இராணுவ பேச்சாளரின் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் இராணுவ பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் இன்று (06) நிராகரித்துள்ளது.

Read More