Headlines

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55…

Read More

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பஸ் கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யுமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் பஸ் கட்டணத்தை ஆறு வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுவரை காலமும் வழக்கத்தில் இருந்த ஆரம்பக் கட்டணமான எட்டு…

Read More

தெற்கு அதி வேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டண விபரம் அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இக்கட்டணங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்டண விபரம்: மஹரகம – காலி:  ரூபா 390 மஹரகம – மாத்தறை:  ரூபா 470 கடுவெல – மாத்தறை : ரூபா 490 கடவத்தை – மாத்தறை :  ரூபா 510

Read More

ஆகஸ்ட் முதல் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.

Read More

கைவிடப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின், வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் -03- விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

3 ஆம் திகதி ஸ்தம்பிக்கும்

-சத்துரங்க பிரதீப் – நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் பஸ்கள், ஞாயிற்றுக்கிழமை (03) அன்று இரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரியன்ஜித், நேற்று வியாழக்கிழமை (30) அறிவித்தார். ‘தங்களுடைய கோரிக்கைகளுக்கான தீர்வுகளைப்  பெற்றுத்தராமையின் காரணத்தினாலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி, பெண்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்…

Read More

பஸ் கட்டணங்கள் அதிகரிக்க தீர்மானம்

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்கள் 3.2 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்று இன்று (20) இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே குறித்த கட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.

Read More

பஸ் சாரதிகளுக்கான விஷேட அனுமதிப் பத்திரம் அடுத்த மாதம் முதல் கட்டாயம்

மக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு வழங்கப்படும் விஷேட அனுமதிப் பத்திரத்தை அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

பஸ் சேவை விஸ்தரிப்பு; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

– எம்.எம்.ஜபீர் – கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. அதன் காரணமாக 15ஆம் கிராமம், அன்னமலை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் காரணமாக…

Read More

தனிமனிதரின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹர்ச டி சில்வா

தனியார் பஸ் போக்குவரத்து சபையின் தலைவர் கெமுனு விஜேரத்தின அவருக்கு வேண்டியதைப் போன்று பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

Read More

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பஸ் கட்டணம் இல்லை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோள்படி உரிய டிப்போக்களின் ஊடாக போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்தன கூறினார். இதற்கிடையில் உடரட்ட மார்க்கத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி…

Read More

அடைமழையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் நட்டம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார். இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More