Headlines

பஸ் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானம்

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து பேச்சு

தனியார் மருத்­துவம், கல்வி மற்றும் தொலை­பே­சிக்­கட்­டணம் ஆகி­ய­வற்­றுக்­கான வற் வரி மே மாதம் 3ஆம் திகதி முதல் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. எனவே தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­க­ளையும் அதி­க­ரிக்க நேரி­டுமா என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­தாக தனியார் போக்­கு­வ­ரத்து சங்­கத்தின் தலைவர் கெமுனு விஜ­ய­ரத்ன தெரி­வித்தார். வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் தனியார் பஸ் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து கூறினார்.

Read More

அதிக கட்டணம் வசூலித்த பேரூந்து நடத்துனர்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட்டிருந்த விசேட பேரூந்து ஒன்றில் அசாதாரணமான முறையில் பயணிகளிடம் இருந்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கண்டி – ஹட்டன் வீதியில் பயணித்த பேரூந்து ஒன்றிலேயே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கண்டியிலிருந்து கினிகேத்தனவிற்கு 68 ரூபா அறவிடப்படும் எனினும் இப்பேரூந்து நடத்துனர் 250 ரூபா கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Read More

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம்….

Read More

மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை

கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்துகள் தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பேருந்துளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும்…

Read More

கண்டி பஸ் வீடொன்றின் மேல் விழுந்து 22 பேர் காயம்

– றிஸ்மி கலகெதர – கண்டியில் இருந்து வட்டபுலுவ நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வட்டபுலுவ “யக்கா வங்குவ” எனும் திருப்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயனித்த 22 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு ஏழு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. “யக்கா வங்குவ” திருப்பத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மேல் விழுந்தது. வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேவேளை, பஸ்ஸில் பயனித்த 22 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

பாடசாலை மாணவர்களே புகைப் பரிசோதனை கட்டணத்தை செலுத்த வேண்டும்

புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும்போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Read More