Headlines

வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியும்

ஊழியர் சேம­லாப நிதியம் மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தாரா­ள­ம­யமும் உள்­நாட்­ட­வர்­க­ளுக்கு நெருக்­க­டி­யையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்­று­வித்­துள்­ள­தாக கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறு ப்­பினர் தினேஷ் குணவர்த்­தன தெரி­வித்­துள்ளார். அரசின் வரவு செல­வுத்­திட்டம் தொடர்­பாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோச­மான விளை­வு­களை சந்­திக்கும் விதத்­தி­லான வரவு செலவுத் திட்­டத்­தினை அரசு முன்­வைத்­துள்­ளது. இதன் மூலம் ஐ.தே.கட்­சியின்…

Read More

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாரளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் கடந்த வௌ்ளிக்கிழமை (20) வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதுடன், இன்று (23) மீண்டும் மற்றுமொரு புத்தகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் எது சரியான புத்தகம் என பாரளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு புத்தகங்களின்…

Read More

தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் (Live)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. 04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும். 04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும். 04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு. 04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம். 04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி. 04.09 PM…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று பிற்பகல் 2 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, வாசிப்பு மீதான விவாதம் 9 நாட்கள் நடைபெறவுள்ளது. வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை வரவு – செலவுத்திட்டம் மீதான மூன்றாம் கட்ட வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் 3ஆம்…

Read More

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். இந்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிப்பது என சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். தேசிய ரீதியில் முக்கியமான தீர்மானங்களை…

Read More

வசதிபடைத்தவர்களுக்கு வரி அதிகரிப்பு! பொருட்கள் மீதான வரிகுறைப்பு

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றி மோசடி செய்வதன் ஊடாக பெரும் வரி இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் ஊடாக அவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதே…

Read More

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்!

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக சாலை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் தொடக்கம் இந்த வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் சாலை…

Read More

மக்களுக்கு சுமையில்லாத வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்

அடிப்படையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மீது சுமையை செலுத்தாத வகையில் அந்த வரவு செலவுத்திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – கிங்ஸ்பேரி நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித்…

Read More