Headlines

வரவு செலவுத்திட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது! பாலித

அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நன்மையானது என்றோ தீமையானது என்றோ கூற முடியாது. எனினும் மக்கள் எதிர்பார்த்த சலுகைகள் நிவாரணங்கள் இதில் கிடைக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை கிரமமான முறையில் மேற்கொள்ள வழியமைக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத்துறை சார் சமூகம் எதிர்பார்த்த நன்மைகளும் நலன்களும் கிடைக்கவில்லை. இதனை விடவும்…

Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அஞ்சப் போவதில்லை. 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தெளிவானதும்…

Read More

கல்விக்கான நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது! அனுரகுமார

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது என்று அனுரகுமார திசாநாயக்க விமர்சனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அனுரகுமார திசாநாயக்க, அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 5.41 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைச்சாத்தியமற்றது. எனினும், கல்விக்காக முன்னுரிமை கொடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று…

Read More

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து பதவியை காத்துக் கொள்ளுங்கள்: ஜோன் அமரதுங்க

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்து கொள்ளுமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 15 மில்லியன் ரூபாவை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சிந்தித்தாவது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கை உயர்ந்துங்கள். வரவு செலவுத்…

Read More

கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படவில்லை: மஹிந்த

ஆளும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவ்வாறு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொடிகாவத்த – கோஹிலவத்த பிரதேசத்தின் விஹாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். நாங்கள் உண்மையின் இது தொடர்பில் முதலில் மகிழ்ச்சி அடைந்தோம். ஆறு சதவீதமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், எனினும் பின்னர் அது தொடர்பில்…

Read More

வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்! ரவி கருணாநாயக்க

வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016ம் ஆண்டு தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களினதும் செலவுகள் குறித்து முழுமையான கவனம் செலுத்தப்படும். அத்துடன் தேவையான இடங்களில் அரசாங்கம் முதலீடுகளை மேற்கொண்டு அதற்கான செலவுகளை வரவு வைப்பதற்கு கணக்குகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த வரவு செலவுத்திட்டத்தில்…

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More

வாகன புகை பரிசோதனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

புகை பரிசோதனை பத்திரம் வழங்குவதற்காக அறவிடப்படும் தொகை அதிகரிக்கப்படவில்லை என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கபட்ட தொகை புகை பரிசோதனையின் போது அறவிடப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

Read More

அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­னர். இந்த நான்கு பாரா­­­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான மலிக்­ ச­ம­ரவிக்கி­ர­ம­வுடன் இது­தொ­டர்­பாக இரண்டு சுற்று பேச்­சு­வார்த்தைகளை நடத்­தி­யுள்­ள­னர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் இந்த நான்கு பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது தீர்­மா­னம் குறித்து அமைச்சர் மலிக் சம­ர­விக்கி­ரம பிர­­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் அறி­வித்­துள்­ளார்.ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியின்…

Read More

வரவு – செலவுத் திட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் பொது மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனவா? இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளதா? என அறிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்து மாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தை வலியுறுத்தினார். கொழும்பு பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் சோஷலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர்…

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More