Headlines

அல்லாஹ்வின் அருள் வளம்

– ஜெஸிலா பானு – அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள். தாய் ஆமினா மற்றும் தாத்தா அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை, செவிலித்தாய் ஹலீமா பெற்றுக் கொண்டார். கிராமத்திலிருந்து வந்தவர்கள் அன்றிரவு நகரத்தில் தங்கி மறுநாள் காலையில் அவர்களின் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர். குழந்தையை எடுத்து ஹலீமா அவருடைய மடியில் கிடத்தியதும் அவருடைய மார்புகளில் பால் சுரந்தது. அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு…

Read More

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல

-எம்.ஐ.முபாறக் – இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல் அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர். யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டமையும்-காணாமல் ஆக்கப்பட்டமையும்- கொல்லப்பட்டமையும்-இடம்பெயர்க்கச் செய்யப்பட்டமையும் நீண்ட வரலாறாக இருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும் நீதி தேடி இன்று தமிழர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டு நீதியை அடையும் கட்டத்தை எட்டியுள்ளன. பிரச்சினைகள் சர்வதேசமயமாக்கப்பட்டமையும் இராஜதந்திர நகர்வுமே இந்த சாதகத் தன்மைக்கு காரணம்….

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேசத்தை நோக்கி: ஏகபிரதிநிதியாக றிஷாத்

-இப்னு ஜமால் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக செயற்பட்டுவருவதை அரவது துணிச்சல் மிக்க  முன்னெடுப்புக்கள் கட்டியம் கூறுகின்றன. அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் குரல் வளைகள் எங்கெல்லாம் நசுக்கப்பபடுகின்றதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலித்த ரிசாத் பதியுதீனின் குரல் இன்று சர்வதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளமை இதற்கு சாண்றாக அமைந்துள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் பாங்கி மூனை ரிசாத்…

Read More

தலைவிரித்தாடும் இனவாதம்

இலங்கை  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை ஆதரித்திருந்தார்கள்.இதில் பேரின மக்கள் நாட்டின் பொது விடயங்களில் மஹிந்த ராஜ பக்ஸவின் போக்கை ஏற்றுக் கொள்ளாது அவரை எதிர்த்திருந்தனர்.இன்றுள்ள ஆட்சி மலர்ந்ததன் பிற்பாடு பத்தொன்பதாம் சீர் திருத்தம்,அரசியலமைப்பு மாற்ற முயற்சி,ஊழல் செய்தோரை குறைந்தது விசாரனைக்காவது அழைக்கின்றமை போன்ற விடயங்களில் இவ்வரசு பூரண திருப்தியுறும் வகையில் செயற்படாது போனாலும் இதையாவது செய்கிறார்களேயென மனதைத் தேற்றிக் கொள்ளும் வண்ணம் செயற்படுகிறது….

Read More

பாத யாத்திரை: எதைப் பிடுங்கப் போகிறீர்? (Article)

-எம்.ஐ.முபாறக் – நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி, அதிகாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமான காரியமாகும். எதையாவது செய்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்அதே பழைய ஊழல் ஆட்சியை நிறுவி பழைய சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவே இருக்கின்றனர். தங்கள்மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தும்கூட-அதற்கான ஆதாரங்கள் இந்த அரசிடம் உள்ளபோதிலும் கூட, இந்த அரசை ஊழல், மோசடிமிக்க அரசாகக்…

Read More

துருக்கி இராணுவ புரட்சி தோல்வி! இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வி

துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும். சிதைவடைந்த…

Read More

முஸ்லிம்களிடம் எடுபடுமா சம்பந்தனின் கோரிக்கை?

– எம்.ஐ.முபாறக் – தமிழ்-,முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சாபக்கேடாக இருந்து வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது முதல் இந்த  மக்கள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சை சுவாசிக்கத் தொடங்கினார்கள் என்றால் அதை மறுப்பதற்கில்லை.முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் ஓரளவு முடிவுக்கு  வந்தது.தமிழர்களின் ஓரிரு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. அதேபோல்,இந்த வருடத்துக்குள்  அரசியல் தீர்வு  வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையால்  இந்த வருடத்தையும் மேலும் நம்பிக்கையூட்டும் வருடமாக  சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.அது அனைத்து இன…

Read More

தமிழ் மொழி கற்பிக்கும் விமலசார தேரர்

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள். அது பிற­ரோடு பழக உதவும். அடுத்­த­வரை அணுக உதவும். வெறும் மொழிப்­பித்து என்­பது உங்­களைக் கிணற்றுத் தவ­ளை­யாக்­கி­விடும். கிணற்றுத் தவ­ளையும் நீந்தும் உயிர்­வாழும். ஆனால், உல­கத்தின் அனு­ப­வமும் அளவும் அதற்குச் சிறி­ய­தாகத் தெரியும்” என முகம் கொள்­ளாத சிரிப்­புடன் எம்­மோடு பேசத் தொடங்­கினார் குட்­டிக்­கு­ளமே விம­ல­சார தேரர். “இந்த இனிப்­பான தரு­ணத்தில் சில விட­யங்­களை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்” என இலக்­கணத் தமி­ழில் தேன் சுவை­யாக கூறினார் 32 வய­தான…

Read More

“இஸ்லாத்தை அறிவோம்”

-பாத்திமா மைந்தன்-       எல்லாப் புகழும் இறைவனுக்கே ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன. எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.’ இதற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்று பொருள். ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும்…

Read More

நில உரிமையும் நில மீட்பும்

நிலத்தில் நன்கு அக்கறை செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதல்ல. அது உங்கள் சந்ததிகளால் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டதாகும். நிலம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து வாரிசுரிமை பெற்றதல்ல. எங்கள் குழந்தைகளிடம் இருந்து கடன் பெற்றதேயாகும்’;. மேற்கூறிய வார்த்தைகள் அமெரிக்க செவ்விந்தியர்களால் 1700 களில் கூறப்பட்ட உபதேசங்களாகும். இக்கூற்று நிலத்தின் பெறுமதியை வெளிக்காட்டுவதோடு , நிலமானது எதிர்கால சந்ததிகளின் உடமைகள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. மனிதன் நீரிலோ, ஆகாயத்திலோ வாழ முடியாது. வாழ்வதாயின் அவன் நிலத்திலேயே வாழ்ந்து தீர…

Read More

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்

– முயினுதீன் அசாருதீன் – “காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது பொறாமையும், எரிச்சலும் கொண்ட சக்திகள் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இல்லாத பொல்லாத பொய்களைக் கட்டிவிட்டு அவரை எப்படியாவது அரசியலில் இருந்து ஓரங்கட்டப் பார்க்கின்றனர். புலிகளால் துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டில் அவர் ஈடுபட்ட போது, தமிழ்ப் பேரினவாதிகள் கொடுத்த கரைச்சல் எண்ணற்றவை. முசலி மக்கள் தமது…

Read More

மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்பு

உங்களுக்கு தெரியுமா? சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்றும் பரவும் தன்மை கொண்டது. ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார். இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது. சும்மாவா சொன்னார்கள் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று. ஆக மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து ‘சிரிப்பு’தான் என்பது உண்மையே. இன்று டி.வி. சேனல்கள் பலவற்றில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மக்களுக்குச்…

Read More