Headlines

மஹிந்தவுக்கு மனிதாபிமானமென்றால் என்னவென்றே தெரியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை…

Read More

மஹிந்த – மைத்திரி மோதல் உக்கிரம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் மூண்டிருந்த சொற்போரானது யோஷித ராஜபக்ஷவின் கைதையடுத்து உக்கிரமடைந்துள்ளது. அரசியல்,பொது மேடைகளில் இருவரும் சராமரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். பதிலடிகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறி பொதுவேட்பாளராக களமிறங்கியது முதல் இருவருக்குமிடையில் சொற்போர் வெடிக்கத் துவங்கியது. எனினும், பகிரங்கமாக – வெளிப்படையாக விமர்சனம்  முன்வைக்கப்படவில்லை. ‘முன்னாள் ஆட்சியாளர்கள்’ என்ற சொற்பதத்தை பயன்படுத்தி மைத்திரியும், ‘முட்டை அப்பம்’ கதையைக்கூறி மஹிந்தவும் நேரடியாக அன்றி மறைமுகமாகவே…

Read More

சங்கக்காரவை விடவும் அரசாங்கம் சிறப்பாக விளையாடுகிறது – மஹிந்த

மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாக சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை உடற்பயிற்சியில் ஈடுபட மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று அவருடன் கலந்துரையாடிய போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. எனக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்ததில்லை….

Read More

எனது பதவியை பறித்துக்கொண்டார்: ராஜபக்ஸ

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தன்னிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நீர்கொழும்பு ,கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் ஒருபோதும் சுதந்திர கட்சியின் தலைமை பதவியை தானம் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது தலைவர் பதவியை பறித்துக் கொண்டார் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று மஹிந்த புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில்  கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுக்கின்றதாம்! மஹிந்த ஆதங்கம்!

அரசாங்கம், நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் ஊடக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனின் இலங்கை வருகை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியும் பிரதமரும் அவரிடம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை செய்துள்ளதாக கூறியுள்ளார். ஐக்கிய…

Read More

ஐ.தே.க.வுக்கு ஆபத்து காத்திருக்கிறது – மஹிந்த சாபம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் மூலம் பல நெருக்கடிகளை ஐக்கிய தேசிய கட்சிய எதிர்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தொடர்பில் ஐ.தே.கவின் முடிவு பிரச்சினைக்குரிய ஒன்றாகும்.  இந்தப் பதவியை வழங்குவதற்கு இன்னும் எவ்வளவோ தகுதியானவர்கள் உள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதனால், அதிகம் நெருக்கடிகளை சந்திக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் யாராவது அதற்கு எதிராக…

Read More

தேசிய அரசாங்கம்: மஹிந்தவின் யோசனை

தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையே என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அஹங்கமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தேசிய அரசாங்கம் என்றொரு கருப்பொருளை ஒரு சிறந்த மனிதரே அறிமுகப்படுத்தினார். அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு முன்னரே இந்தக் கருப்பொருளை அறிமுகப்படுத்தி விட்டார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்- மஹிந்தவுக்கு அறிவுரை

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி…

Read More

தண்டனை அனுபவிக்கத்தயார் ;மஹிந்த

தவறு செய்­தி­ருந்தால் தண்­டனை அனு­ப­விக்கத் தயார் என்றும் மக்கள் அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள வெறுப்பை தமது குடும்­பத்தார் மீது காண்­பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார் நேற்று காலை கண்டி தலதா மாளி­கைக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்­டதன் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இன்னும் சில நாட்­களில் என்­னையும் அழைப்பர். நாம­லையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகி­யோ­ரையும் அழைப்பர். நல்­லாட்­சியை…

Read More

தேர்தல் கோரி நீதிமன்றம் செல்லும் மஹிந்த

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். உடனடியாக இந்த தேர்தலை நடத்துமாறு கோரப்படுகிறது. ஆனால் இது திட்டமிட்டே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி அதனை நடத்த செய்யவிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

Read More

சிறைச்சாலை உணவை மறுத்த யோஷித

சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (1) முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும்  அவர்களின் கோரிக்கை படி வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

Read More