Headlines

“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…

Read More

உயர் நீதிமன்றில் பிரசன்னமானார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். யோஷித ராஜபக்சவின் பிணை மனுக் கோரிக்கை தொடர்பான மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் நோக்கிலே அவர் இவ்வாறு நீதிமன்றில்  பிரசன்னமாகியுள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் காணியில் கடும் தேடுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமான காணியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் உள்ள காணியொன்றே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. STF பலத்த பாதுகாப்பில் பெகோ இயந்திரம் கொண்டு குறித்த இடமானது தோண்டப்பட்டு சோதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுடனேயே இத்தேடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…

Read More

மஹிந்த ராஜபக்ஷ யுக புருஷர்

மஹிந்த ராஜ­பக் ஷ இந்­நாட்டில் யுத்­தத்தை முடித்து வைத்த யுக புரு­ஷ­ராவார். அவரை சிறையில் அடைப்­ப­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சிகள் தவ­றான செயற்­பா­டாகும் என நேற்று சபையில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் ஐ.ம.சு.மு. பங்­காளிக் கட்சித் தலை­வர்­க­ளான தினேஷ், விமல், வாசு­தேவ ஆகி­யோரின் ஆத­ரவு கிடைத்­துள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு சபை தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர்…

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More

விஜயவின் நினைவு நிகழ்வில் மஹிந்த பங்கேற்றமை வியப்பை அளிக்கிறது!

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வில், மகிந்த ராஜபக்ச பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விஜயகுமாரதுங்கவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்காத ஒரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இவ்வாறான ஓர் பின்னணியில் விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியமை ஆச்சரியமளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,மகிந்தவிற்கும் தமது கணவருக்கும் இடையில் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இறுதிக் கிரியைகளில் கூட பங்கேற்காதவர் நினைவு நிகழ்வில் பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக சந்திரிகா…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை…

Read More

மஹிந்த அரசியல் அநாதையாவார்

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவ ட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தேர்ந்­தெ­டுத்­துள்ள அர­சியல் பாதை தவ­றா­னது. அவர் சுதந்­திரகட்­சியில் உள்ள சிரேஷ்­டத்து­வத்தை இழந்து அர­சியல் அநா­தை­யாகப் போவ­தை­யிட்டு வருந்­து­கின்றேன் என்று தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் (16) இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

Read More

மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வனம் அர­சு­டை­மை­யாக்­கப்­ப­ட ­வேண்டும். யோஷி­தவை கைது­செய்­வ­தற்கு முன் அவ­ருக்கு வழி­ காட்­டிய மஹிந்த ராஜ­பக்ஷ ­வையும் ஷிராந்­தி­யை­யுமே கைது­செய்­தி­ருக்க வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணி யின் தலை­வரும் மத்­திய மாகா­ண­சபை உறு ப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியா­பா­ரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்­டி­யினர் தலை­தூக்க பொலிஸார் இட­ம­ளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதி­கா­ரத்­ததை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து…

Read More

யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த உயர்நீதிமன்றத்துக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவின் இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது. இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள…

Read More