Headlines

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் வரிய குடும்பங்களின் வாழ்வாதார உதவி

வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பெட்டி , மண்வெட்டி மற்றும் GPS வழங்கும் நிகழ்வு இன்று (13) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில் கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலந்து கொண்டனர். மீனவர்களுக்கான மீன் பெட்டிகள், மண்வெட்டிகள், பால் குவளை மற்றும் GPS ஆகிய உபகரணங்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி…

Read More

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முசலிப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!

மன்னார், முசலியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழாவை முன்னிட்டு, முசலிப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ் தலைமையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், விழா ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு: ஐ.நா.சபை தகவல்

பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அவை போதுமான…

Read More

பிழையான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்  பைசல் காசிம்; புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஹ்ஸி குற்றச்சாட்டு.

சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம்  புத்தளம் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையானது மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாடு என்று புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ் .ஆர் .எம்.முஹ்ஸி தெரிவித்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின் உறுப்பினர் எனும் வகையிலும் , புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவன் என்ற வகையிலும் இந்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடரபாக உண்மை நிலையை தெரியபடுத்த வேண்டியது எனது கடமையாகும். புத்தளம் வைத்திய சாலையில் 1200 படுக்கைகள் கொண்ட 6 மாடி கட்டிடம் அமைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

Read More

முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளை அரசு உடன் தீர்த்து வைக்க வேண்டும்

-ஜாவித் – இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை இந்த நாட்டில் எதுவுமற்ற ஒரு சமுகமாக ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கின்றன. இது ஒரு ஆபத்தான செயற்பாடுகளாகவே இருப்பதை காண முடிகின்றது. இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் எதிரிரொலியாக பாதிக்கப்பட்ட மற்றொரு சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது கடந்த கால அரசாங்கங்களால்கூட…

Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார். இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று (13) பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

Read More

நாச்சியாதீவு அல்-ஹிகம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!

பிரதம அதிதியாக தாரிக் ஹாஜியார் பங்கேற்பு! அனுராதபுரம், நாச்சியாதீவு அல் – ஹிகம் அரபுக் கல்லூரியின் 02வது (அல் ஹாபிழ், அல் ஆலிம்) பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அனுராதபுர மாவட்ட அமைப்பாளருமான A.R.M.தாரிக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Read More

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்காக 35 லட்சம் ரூபாவை செலவிட்ட மீரிகம பிரதேச சபை

பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 35 லட்சம் ரூபாவிற்கு மஹிந்தவின் உருவப் படத்தை அச்சிட்டு அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். உரிய விலை மனுக் கோரல் விதிமுறைகள் பின்பற்றப்படாது அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் எனவும் பொது நிர்வாக…

Read More

மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு (photos)

A.S.M.இர்ஷாத் கிரான்ட்பாஸ் அவ்வல் ஸாவிய்யா அல் மத்தரசத்துல் யூசுபிய்யாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மத்ரசாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கினார். ஆ பவுண்டேசனின் ஏற்பாட்டில் இவ் இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சருக்காக விசேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில்…

Read More

நாமலுக்கு ‘பாய்’ இல்லை

மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெட்ரஸ் வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெட்ரஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெட்ரஸ், அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்துகின்றார் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜே கூண்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதற்கு அண்மையுள்ள கூண்டுக்குள்…

Read More

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்றுஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More