மடு ஆலயத்தில் பறந்தது எமது விமானம் அல்ல ; தெரிவிக்கிறது விமானப் படை
மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில்…
