Headlines

10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு

மொஹம்மத் சனாஸ்  எதிர்வரும் 29ம் திகதி பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார் . நாட்டின் நிதி நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளேன். இது வரை காலமும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.உண்மை நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மக்களுக்கு மிகவும் அவசியமான பத்து பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு…

Read More

இத்தாலியில் அதிபரின் ராஜினாமா அறிவிப்பால் பிரதமர் ரென்ஷிக்கு அழுத்தம் அதிகரிப்பு!

இத்தாலி நாட்டின் அதிபரான ஜியோர்ஜியோ நப்பொலிட்டனோ உடனடியாகத் தனது பதவியைத் துறக்கும் முடிவை எடுத்திருப்பதாகப் பிரதமர் மத்தேயோ ரென்ஷி அறிவித்துள்ளார். இதற்கு முன் இத்தாலியில் அரசியல் கொந்தளிப்பு நிகழும் போதும் அந்நாட்டை வழிநடத்தத் தனது பதவிக் காலத்தை அதிகரித்திருந்த முன்னால் கம்யூனிச ஆதரவாளரான 89 வயதாகும் நப்பொலிட்டனோ திடீரென பதவி விலகியது, அவரது இடத்தை நிரப்ப இன்னொருவரை நியமிப்பதையும் சவாலாக்கியுள்ளது. 1953 ஆம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினரான நப்போலிட்டனோ 2006 ஆம் ஆண்டு முதலில் அதிபரானார்….

Read More

அமெரிக்க இராணுவத்தின் சமூக வலைத் தளங்களை ISIS முடக்கியது தொடர்பில் விசாரணை!

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் டுவிட்டர் மற்றும் CentCom எனப்படும் பிரிவின் யூடீயூப் கணக்கு ஆகியவற்றை நேற்று திங்கட்கிழமை ISIS ஆதரவாளர்கள் தற்காலிகமாக முடக்கியிருந்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. சுமார் 110 000 பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் டுவிட்டரை ஹேக் செய்த ISIS ஆதரவாளர்கள் அதில், ‘அமெரிக்க வீரர்களே நாங்கள் வருகின்றோம்! பின்னால் திரும்பிப் பாருங்கள் என்ற டுவீட்டை இடம்பெறச் செய்ததுடன் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அமெரிக்க…

Read More

காலி முகத்திடலில் பாப்பரசர் (படங்கள் இணைப்பு)

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ் தற்போது காலி முகத்திடலில் நடைபெறும் விசேட ஆராதனை நிகழ்வுகளின் கலந்து கொண்டுள்ளார்.  புனித பாப்பரசரை காண காலிமுகத்திடலில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

Read More

சஜின்வாஸ் குணவர்த்தனவின் வீட்டின் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் அம்பலாங்கொட பிரதேச வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று மாத்திரமே வெடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மஹிந்த, கோட்டாப, நாமல், கப்ரால் ஆகியோருக்கு எதிராக JVP செய்துள்ள முறைப்பாட்டின் முழு விபரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜே.வி.பியினர் கோரிக்கை விடுத்தனர். ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துந்நெத்தி…

Read More

புதிய உயர்கல்வி அமைச்சர் – ஒரு கண்ணோட்டம்

-நிந்தவூர் ஷிப்லி- இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்களைக்கடந்து புதிய ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் “100 நாட்களில் புதிய தேசம்” என்னும் எல்லைக்குள் நுழைந்திருக்கிறோம். அவரது வாக்குறுதிகளுக்கு அமைவாக இன்று புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 27 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும்,  09 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அமைச்சர்களும் தகுதிவாய்ந்தவர்களாகவும், பொருத்தமானவர்களாகவும் தெரிவுசெய்யப்படடுள்ளமை ஜனாதிபதியின் தெளிவான பாதையை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதில் இராஜாங்க அமைச்சர்களுள் ஒருவராக கௌரவ…

Read More

சவூதி அரேபியாவில் ஐஸ் மழை (படங்கள் இணைப்பு)

சவூதி ஆரேபியாவின் சில பிரதேசங்களில் ஐஸ் மழை கொட்டியதாக அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றிலிருந்து சில படங்களை இங்கு காண்கிறீர்கள்..!

Read More

யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்:ஜனாதிபதி

தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

Read More

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரினால் கட்சியை கட்டியெழுப்ப முடியாது!– ஜனக பண்டார

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூடி என்னை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்தனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக கட்சியின் சிரேஸ்ட உப தலைவராக நான் கடமையாற்றியிருக்கின்றேன். இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் தலைவரும், செயலாளரும் தனித்தனியாக போட்டியிட்டனர். நான் தலைவரின் வெற்றிக்காக உழைத்தேன்.  எனினும், தேர்தலில் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டினார். கட்சியையும், கட்சியின் உறுப்பினர்களையும் பாதுகாத்துக்…

Read More

றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார்

K.M.ரிப்காஸ்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார். (றிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்)

Read More