தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவாதம்
இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய…
