Headlines

மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும்.. சம்பிக்க அதிரடி

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார். முன்னைய ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் தண்டிக்கப்படவேண்டும் என்று அமைச்சர்…

Read More

மகளிருக்கான சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட  அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் மகளிருக்கான சுயதொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) புத்தளம் பிரதேச சபை வரவேற்புக் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.    

Read More

சுசில் குழுவினர் வேட்பு மனு தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விமல் வீரவம்ச மற்றும் டினேஸ் குணவர்த்தன ஆகியோர் இவருடன் சென்றனர். நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுசில் பிரேமஜெயந்த இன்று காலை பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து திரும்பினார்.

Read More

அம்பதென்ன, வெலேகடையில் முஸ்லிம் வர்த்தகரின் மர ஆலைக்கு தீ வைப்பு! அமைச்சர் ரிஷாட் களத்துக்கு விஜயம்!

அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில் சற்றுமுன்னர் (07) முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மரஆலைகளை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பவத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், களத்திற்கு விரைந்து தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டார்.              

Read More

ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியா செல்லும் ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கி வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு செயற்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதையடுத்து பாகிஸ்தான் ஆதரவோடு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு, காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டு, இங்கு பயங்கரமானத் தாக்குதல் நிகழ்த்தவும் திட்டமிட்டு…

Read More

இன்று வில்பத்தை அண்டிய பகுதிகளில் இனவாத குழுக்கள் விஜயம் செய்த செய்தியின் மேலதிக விபரங்கள்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  மன்னார் மாவட்டத்தின் வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு உள்ளிட்ட கிராமப் பகுதியில் இன்று (13) இனவாத அமைப்புக்களான ராவணபலய, சிஹல உறுமைய மற்றும் ஜே.வி.பியின் பிக்குமார் உள்ளிட்ட குழுக்கள் சுமார் மூன்று நான்கு பேரூந்துகளில் சென்று அப்பகுதியைப் பார்வையிட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்பட்தாக அங்கிருக்கும் மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு வந்தவர்கள் அப்பகுதி மக்களுடன் எந்தவிதச் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வில்லை…

Read More

ஜனாதிபதி தலைமையில் முஸ்லிம்கள் தொடர்பில் விசேட கூட்டம்

– அஸ்ரப் ஏ சமத் – வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லிம்கள் சம்பந்தமாக நேற்று (11) திகதி பி.ப 2.மணிககு ஜனாதிபதித் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று  நடைபெற்றது. இதில் அமைச்சா்களான  றிஷாத் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன்,  ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயா கமகே, சஜித் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியெல்ல,  ராஜித்த சேனாரத்தின, கிழக்கு முதலமைச்சா் நசீர் அஹமட், வடக்கு ,கிழக்கு ஆளுணா்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்….

Read More

பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம் – அமைச்சர் றிஷாத்

பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, நேரியகுளம், மாங்குளம், அல்/ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “அருகிலுள்ள நல்ல பாடசாலை”  திட்டத்தின் கீழ் அமைச்சரின் முயற்சியினால் உள்வாங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் இன்று (24/10/2016) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற…

Read More

புத்தளம் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டால் இனி பிரதிநித்துவத்தை பெற முடியாத நிலை -றிஷாத் பதியுதீன்

புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இல்லாமல் செய்து இந்த நாட்டு முஸ்லிம்களின் மத கடமைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த மஹிந்த உள்ளிட் பொதுபலசேனா ஆதரவு குழுவினருக்கு வாக்குககளை பெற்றுக் கொடுக்கும் இரகசியங்கள் தொடர்பில் புத்தளம் எனதருமை மக்கள் அவதானமாக இருக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் புத்தளம் நகரில்…

Read More

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு

கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம்,  எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம்  அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும் ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பதிவாளர் திணைக்கள நாயகம் ஆர்.எஸ். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும் கம்பனி பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கும்…

Read More

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் க்சி ஜின்பிங்-ஐ இன்று சந்தித்தார். இந்தியா – சீனா நாடுகளுக்கிடையிலான உறவுகளில் நீடிக்கும் சிக்கல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார்.

Read More

காப்பெட் பாதையாக மாற்றமடையும் குவைத் வைத்திசாலை வீதி: அ.இ.ம.கா.வின் அபிவிருத்திப் பணி

குவைத் வைத்திசாலை வீதி (Kuwait Hospital Road) காப்பெட் பாதையாக புனர்நிர்மானம்  செய்யும் பணிகள் நேற்று (2017-02-27)  நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களும், அலி சப்ரி ரஹீம் அவர்களும் கலந்துகொண்டனர்.

Read More