Headlines

வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

ஜெயலலிதாவுக்கு அடிபணியமாட்டோம்

ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத் துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம். தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை…

Read More

மைத்திரி – மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு

மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

Read More

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்.

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் (18) நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள், நிதியமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

கோட்டாபயவிடம் விசாரணை எது குறித்து தெரியுமா?

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் 500 ஊழியர்கள் மற்றும் 60 இலட்சம் ரூபாய் நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டமை குறித்தே கோட்டாபயவிடம் வினவப்பட்டதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி விசாரணை…

Read More

கடந்த ஆண்டு ஆறு கோடி பேர் அகதிகளானார்கள்: ஐநா

உலக அளவில் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் போர்கள் காரணமாக சொந்த வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு எப்போதையும்விட மிக அதிகபட்சமாக உயர்ந்திருப்பதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஆறுகோடி பேர் உலக அளவில் இப்படி பலவந்தமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறும்படி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஐநா மன்றம் கணக்கிட்டுள்ளது. இப்படியான அகதிகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் சிறார்கள். சிரிய மோதல்களில் தான் அதிகபட்சமானவர்கள் இப்படி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். நாடுகளின் அரசாங்கங்கள் எந்த கவலையும் இல்லாமல் நினைத்தமாத்திரத்தில்…

Read More

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

– சுஐப் எம்.காசிம் –  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…

Read More

பம்மன்ன மக்கள் சந்திப்பும் எதிர்கால அபிவிருத்தி திட்டமிடல் கலந்துரையாடலும்!

கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன, ஹொரவதுன்னகம மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த 07 அன்று  அகில இலங்கை மக்கள் காங்கிஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான் மற்றும் பிரதேச இளைஞர்கள், கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

இலங்கையின் சனத்தொகையில் 23.4 வீதமானோருக்கு புகைப்பழக்கம்!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார். 2020இல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில்  சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். 20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் மரணமாகியுள்ளனர். வெண்சுருட்டில், 700 வகையான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 69 வகையான இரசாயனங்கள் புற்றுநோயை…

Read More

இரகசியத் தடுப்பு முகாம்கள்; ஜெனிவாவில் தீவிர ஆராய்வு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேசபைக்கு சார்பாக இடம் பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டுகாணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக நடந்த சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.இதில் கலந்துகொண்டகாணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, தனது கணவரை தேடித்தறுமாரு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை…

Read More

“கல்வியில் கைதேர்ந்து பொறுப்புள்ள பிரஜைகளாக பிரார்த்திக்கின்றேன்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

உயர்தரப் பரீட்சை எழுதும் சகல மாணவர்களதும் அபிலாஷைகள் வெற்றிபெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாளைய தினம் (04) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மாணவர்களின் அடைவுமட்டம், பெற்றோர்களின் இலட்சியங்களை ஈடேற்ற உதவட்டும். கல்வியில் கைதேர்ந்து, பொறுப்புள்ள பிரஜைகளாக மாணவர்கள் வளர எனது பிரார்த்தனைகள். தொழில்நுட்ப உலகில் அதிகரிக்கும் சந்தைப்போட்டிகள் மற்றும் தொழில் சந்தைகளுக்குள் நுழைவதற்கான சவால்களை வெல்வதற்கு…

Read More

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)

– பா.திருஞானம் – பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று (19) காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே…

Read More