Headlines

ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள யாழ் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு. முழு அறிக்கை

பாருக் சிகான் வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு வடக்கு மாகாண சபையின் 24 ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும்…

Read More

விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக 5 ஆயிரம் பேரை கூட்டி கூட்டம் வைத்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – அஸாத்சாலி

விமல் வீரவன்சவுக்கு முடியுமாக இருந்தால் 5 ஆயிரம் பேரை கூட்டி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காட்டட்டும். நான் அரசியலில் இருந்து விலகுவேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி பகிரங்க சவாலை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்குவது எப்படிப் போனாலும், வீரவன்ச குழுவினர் ஐவரும் சேர்ந்து பிரதேச சபை ஒன்றையாவது வெற்றிகொள்ள முடியாது. நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு…

Read More

ரக்பி வீரர் தாஜுடின் மரணம் குறித்து புதிய விசாரணை

இலங்கையின் முன்னணி ரகர் வீரர்களில் ஒருவரான மொஹமட் தாஜூடின் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு,அவரது சடலம் வாகனத்தில் போட்டு எரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களில் அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரபல அரசியல் மறைகரமொன்று செயற்பட்டதனால் விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாஜுடின் கொலை தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. காதலி…

Read More

மஹிந்த மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! – ராஜித சேனாரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதியின் செலவுக்கென கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கீடு, விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, மற்றும் ஊழல் மோசடி உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு எதிராக அரசு பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

Read More

தென்னை பயிர் செய்கை சபையின் தலைவராக ஹிதாயத் சத்தார் நியமனம்

அஷ்ரப் ஏ சமத் தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவராக கண்டி யஹலத்தென்னை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.பெருந்தோட்டதுறை  அமைச்சர் லக்மன் கிரியல்ல அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மத்திய மாகாண சபை தேர்தலில் 15400 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட இவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மாகாண சபைக்கு தெரிவாகவில்லை. சந்தைப்படுத்தல் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியான இவர் ஐக்கிய தேசிய கட்சியின்  கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்பாளர்,கண்டி மாவட்ட முகாமையாளர்,அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல…

Read More

ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல் (வயது 57) சென்றுள்ளார். கடந்த 6-ந் தேதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்துள்ளார். இதைக்கண்ட ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒரு நபர் நடமாடுகிறார் என போலீசில் புகார் செய்து விட்டார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க போலீசார், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டனர்.அவருக்கோ ஆங்கிலம்…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு உணவு?

பாடசாலை மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது. ஒருவேளை உணவை வழங்குவதன் ஊடாக பிள்ளைகளின், குறை போஷாக்கு, விற்றமின் குறைபாடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும் எனவும், சுகாதாரமான பலம்வாய்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்…

Read More

3 முஸ்லீம் மாணவர்கள் படுகொலை. மூடி மறைத்த விபச்சார ஊடகங்கள்!

அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. பரகத் வயது 23, அவரது மனைவி யூசுர் சாலிஹா வயது 21, தங்கை ரிஜான் அபு சாலிஹா வயது 19 இந்த மூன்று இளம் தளிர்களை வீட்டீன் உள்ளே வந்து தலையில் சுட்டு கொன்றிருக்கிறான் ஒரு கொடியவன். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 46 வயதான ஸ்டிபன் ஹீக்ஸ் என்று போலிஸாரால் அறியப்பட்டுள்ளான். இந்த மூன்று பாலஸ்தீனியர்களுமே எப்போதும் சமூக சேவைகளில்…

Read More

ISIS இயக்கத்தில் சேரும் வெளிநாட்டுப் போராளிகள் தொகை அதிகரிப்பு!:அமெரிக்கா

சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போராடி வரும் ISIS இயக்கத்தில் இணைவதற்காக வெளிநாடுகளில் இருந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அபாய மட்டத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்கத் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையத்தின் இயக்குனர் நிக்கொலஸ் ரஸ்முஸ்ஸென் கருத்துத் தெரிவிக்கையில், ISIS இயக்கத்தில் இதுவரை 90 இற்கும் அதிகமான நாடுகளில் இருந்து 20 000 இற்கும் அதிகமான போராளிகள்…

Read More

துமிந்த சில்வாவை கைது செய்யாமை சிக்கலான விடயம்: ஹிருணிக்கா

துமிந்த சில்வா தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு மேற்கொள்கின்ற விசாரனை நடவடிக்கை ஊடுருவல் குறைவாக இடம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துமிந்த சில்வாவிற்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுவதாக கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

பிக்குகளுக்கு முன் தனது நீண்டநாள் முஸ்லிம் நண்பர் மீது சீறிப்பாய்ந்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ்டுரன்டுகளுக்கும், ஹோட்டல்களுக்கும் சொந்தக் காரரான இவா் மஹிந்தவோடு கூடிக்குலாவி திாிவதில் முன்னணியில் நினறவா். முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்த காலங்களில் கூட மஹிந்தவுடனான இவாின் நட்பு மிகவும் நெருக்கமாகவே இருந்தது. தோ்தல் காலங்களில் முஸ்லிம்களை மஹிந்தவின் மாளிகைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை இவா் கடந்த காலங்களில் கச்சிதமாக நிறைவேற்றுபவராய் இருந்துள்ளாா். சுருக்கமாக சொன்னால் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவே…

Read More

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது . அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தேசப் பிரிய உள்ளிட்ட அதிகாரிகள்.மற்றும் பிரதேச செயலாளர்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர். இதன் போது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த சில…

Read More