Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் பானகமுவ பாடசாலைக்கு புதிய மக்தப் கட்டிடம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதேச சபை வேட்பாளருமான அஸ்வரின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன்,…

Read More

“எதிர்கால நன்மைக்காக வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்”

– க.கிஷாந்தன் – வாக்காளர் பதிவில் அக்கறையின்றி இருக்கும் மலையக மக்கள், எதிர்கால நன்மையை கருத்திற்கொண்டேனும் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வது அவசியம் என பிரிடோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ‘ஜுன் மாதம் வாக்காளர்களை பதிவு செய்யும் மாதம் என்பதால் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் கிராமசேவகர்கள், வாக்காளர் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். எனவே, மலையக மக்கள் அப்படிவங்களை பெற்று தாம் வாக்களார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ எனவும் அந்நிறுவனம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் மேலும்…

Read More

பொய்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுபல சேனா 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் – றிஷாத் பதியுதீன் (video)

வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரியுள்ளார்.  இதுதவிர, வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுபல சேனா கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விகிதாசார அடிப்படையற்ற வகையில் மக்களை மீளக்…

Read More

மஹிந்த நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதி: எஸ்.பி

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய  திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். “இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய…

Read More

அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப…

Read More

ஜனாதிபதி முன்னிலையில் றிஷாத் பதியுதீன் விடுத்த சவால்

– அமைச்சரின் ஊடகப்பிரிவு – வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முன்னையிலையில் இந்த சவாலை ரிசாத் பதியுதீன் மிக ஆக்ரோசமாக விடுத்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சபையில் மிக ஆக்ரோசமாக…

Read More

பொது வேட்பாளருக்கு ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர் – சரத் பொன்சேகா

பொது வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியானவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள அரசியல் தலைவர்களில் ரணில் விக்ரமசிங்க அனுபவ முதிர்ச்சியுடையவர். ரணில், அனுபவமும் திறமையும் உடையவர். ரணில் பொருத்தமற்றவர் என சிலர் குறிப்பிடுகின்ற போதிலும், என்னை பொறுத்தவரையில் ரணில் போட்டியிடுவதில் பிரச்சினையில்லை. பொது வேட்பாளர் அனுபவமும்,  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர்…

Read More

புத்தளம், முதளைப்பாளி, அல்-மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, அல் – மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா, இன்று  வெள்ளிக்கிழமை (23) முதளைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் Z.A.தௌபீக் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.T.M.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் மௌலவி…

Read More

“ஐக்கியப்படும் அரசியல் சித்தாந்தமே நாட்டிலுள்ள அதர்மங்களை அழிக்கும்!” – தலைவர் ரிஷாட்!

தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று தீபாவளியைக் கொண்டாடும் சகல தமிழ் சகோதரர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நரகாசுரன் ஒழிக்கப்பட்ட இத்தினம், கெட்ட எண்ணங்கள் நிலைப்பதை எதிர்க்கிறது. மானிடப்பிறவிகள் மத்தியில், தீய எண்ணங்களை உருவாக்கும் எந்த சக்திகளும் நிலைக்காது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் இத்தினம் அமைந்துள்ளது. …

Read More

குழாய்க் கிணறுகள் கையளிப்பு!

காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகள் கையளிக்கம் நிகழ்வு அணுசரனையாளர்களின் பங்கு பற்றலுடன் காத்தான்குடி, ஏறாவுர், பாலமுனை மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம் பெற்றது. இதன் போது 15 கிணறுகள் கையளிக்கப் பட்டது.

Read More

ஆசிரியை ஒருவரை தாக்கிய அதிபர் கைது

ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர். விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார். பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆசிரியையின் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்பு தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

இலங்கையில் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வு

இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார்.2005 இல் இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 4 வீதமாக காணப்பட்டதாகவும் அது தற்போது 46 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (OU)

Read More