Headlines

இலங்கையிலுள்ள விஞ்ஞானிகளை சந்திக்கும் யுனெஸ்கோ பணிப்பாளர்

இலங்கை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள யுனேஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி எரினா பொக்கோ பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார். திருமதி எரினா பொக்கோவுக்கும் இலங்கையின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று (16) நடைபெறவுள்ளது. அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தலைமையில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞான ரீதியான செயற்றிட்டங்கள் குறித்து திருமதி எரினா பொக்கோவா…

Read More

மத்தல விமான நிலையத்துக்கு மூடுவிழா?

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

“நான் என், இறைவனுக்கு அஞ்சுகிறேன்” (காஃபா அருகில் நடைபெற்ற, உண்மைச் சம்பவம்)

ஓர் நாள் இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது.. பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் “ஒசாமா” என்ற அரபு இளைஞர் டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து செல்லும் போது என்னை அழைத்து , அவர் டிஸ்ஸு விற்று சேர்த்த பணத்தை எவ்வளவு இருக்கிறது என எண்ணிக் கொடுக்குமாறு கேட்டார். ” ஏன் உனக்கு எண்ணத் தெரியாதா? ” என நான் கேட்டேன். அதற்கு அவர் ” ஒரு ரியால்…

Read More

தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

– அஸ்ரப் .ஏ சமத் – லங்கா எக்ரோ  பொரோசிசிங் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு  எஸ்.எல்.ஏ மற்றும் ஜ.எஸ்.ஓ 22000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 18ஆம் திகதி கொழும்பு  சினமன் கிராண்ட்  கோட்டலில் நடைபெற்றது. இக் கம்பனி  1970 களில் ஒரு அரிசி, மா அரைக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வத்தளையில் மாபெரும் ஏற்றுமதி உள்ளுர்  பருப்பு, சோளம், குரக்கன் போன்ற பல வா்த்தக தானியங்களை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ளுரிலும் “அங்கா்…

Read More

“அடுத்த சில வாரங்களில், ஆச்சரியப்படும் தீர்மானங்கள்” – முக்கியஸ்தர்கள் கைதாகும் வாய்ப்பு

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. புதிய சட்டமா…

Read More

வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் -சுபைர்

– அபூ பயாஸ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப்…

Read More

ஆபாச இணையதளங்கள் அதிரடி முடக்கம்

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்துஇந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச தளங்கள்ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், இத்தகைய தளங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென…

Read More

கட்டாரில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த இருவர் மரணம்!

file image கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக,…

Read More

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

(நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77) * அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60) * அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு…

Read More

1959 இல் பண்டாரநாயக்காவை படுகொலை செய்தது போன்று, மைத்திரியை படுகொலைசெய்ய முயற்சி – ராஜித சேனாரத்ன

-எம்.ஏ. எம். நிலாம்- ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக  நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி…

Read More

மஹிந்த குழப்புகின்றார்

குழப்புகின்றார் மஹிந்த  சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பிள­வுகள் இல்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் கட்­சியை குழப்­பிய அதே அணுகு­மு­றையை மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போதும் முன்னெ­டுத்து வரு­கின்றார். எக்­கா­ரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவுப­டுத்த இடமளிக்க முடியாது. நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட கூட்­டத்­திற்கு நாம் அஞ்­ச­மாட் டோம். அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை என முன்னாள் ஜனா­தி­ப­தி­ சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் மஹிந்த ராஜ­பக்…

Read More