Headlines

புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை வேண்டாம் – பிக்குகள் சத்தியாக்கிரகம்

ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை நிர்மானிக்க வேண்டாம் என கோரி பௌத்த பிக்குகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ஆனைவிழுந்தாவப் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறுக் கோரி தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஒன்பதாவது நாளாக சத்தியாகிரகப் போரட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். (vk)

Read More

மோடியின் வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 86 பேர் விடுதலை

கடந்த மாதம் 26ம் திகதி இலங்கை எல்லையைத் தாண்டி மீன் பிடித்தனர் என்று தமிழக மீனவர்கள் 86 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் முல்லைத் தீவு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழக சிறைகளில் இருந்த 12 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவுப்…

Read More

அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவர் சந்திப்பு

செய்திப் பிரிவு இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதி தேர்தலுக்குப்பிறகு நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம் அதிகமான வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீடுசெய்வதற்கான ஆர்வம் மற்றும் 100 வேலைத்திட்டமும் அதன் அடைவுகள்,போன்ற முக்கிய விடயங்களை தூதுவருக்கு விளக்கினார். எஸ்டோனியா முதலீட்டார்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும், தொடர்ந்து இலங்கையுடன் உறவைப்பேணுவதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரித்தார். இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் கலந்துக் கொண்டார்.

Read More

இவரை கண்டுபிடிக்க உதவுங்கள்

அபூ பயாஸ் மட்டக்களப்பு மாவட்ட,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆஸ்பத்திரி வீதி,ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கள் கிழமையிலிருந்து (09-03-2015) காணாமல் போயுள்ளார். ஏறாவுரிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் செல்லும் லொறியில் நடத்துனராக (கோளயா”) சென்ற இவர் கொழும்பிலுள்ள கடையில் திங்களன்று காலை அரிசி இறக்கிவிட்டு அருகிலுள்ள ஹோட்டலில் தேநீர் குடிக்க சென்ற இவர் திரும்பி வரவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு நாட்களாக தேடியும் இவரை…

Read More

குவைத்தில் உயிரிழந்த இலங்கை பெண்: சடலத்தை கொண்டுவர நடவடிக்கை

ஜவ்பர்கான் குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) எனும் யுவதியே குவைத் நாட்டில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார். இந்த யுவதியை காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு…

Read More

அஜித் ரோஹன OUT – றூவான் குணசேகர IN

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கொழும்பு – வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்,  புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

Read More

கோட்டா கைது? மைத்திரி நாடு திரும்பியதும் இறுதித் தீர்மானம்!

-Gtn- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் நேற்றைய 11-03-2015 தினம் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகள் தொடர்பில் நேற்றைய தினம் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் போது அவன்ட் கார்ட் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளாரிடம் விரிவாக விசாரணை நடாத்தவும், அதற்காக அவரை கைது செய்து…

Read More

தமது இனத்தவர்களுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் ஹக்கீமிடம் ஆதிவாசி தலைவர் கோரிக்கை

முகம்மட் பஹாத் ஹெனானிகல ஆதிவாசிகளின் மறைந்த தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தோவின் புதல்வர்நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (11) பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், வேடுவர் தலைவர் கேட்டுக்கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…

Read More

அரங்கச் செயற்றிடத்தில் 15ஆயிரம் பேர் பங்கேற்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் பல்வகைமை பற்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அறிவிக்கின்து. இம்முறை சுமார் 15 ஆயிரம் பேர் இலங்கை மக்கள் அரங்கத்தில் இடம்பெற்ற அளிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். மக்கள் அரங்கத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அமிக்சை பற்றிய சிந்தனைகள் சுமார் 30ஆயிரம் பேரிடம் சென்றிருப்பதை இறுதிக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக ஊடக மன்றம் மேலும் தெரிவிக்கின்றது. கிழக்கு, மத்திய மற்றும்…

Read More

வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்றப்படும் வரையில் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்க வேண்டும்-அத்து­ர­லியே ரத்ன தேரர்

நூறு நாட்கள் வேலைத்­திட்டம் என்­பது தேசிய அர­சாங்­கத்­திற்­கான பிர­சா­ரமே தவிர கோட்­பாடு அல்ல. மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப டும் வரையில் தேசிய அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பிரதித் தலை­வரும் தூய்­மைக்­கான நாளை அமைப்பின் தலை­வ­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதே தேசிய அரசின் பலம் எனவும் சுட்­டிக்­காட்­டினார். சமூக நீதிக்­கான மக்கள் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று…

Read More

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து பொலிஸ் துறையை மீளப் பெறுங்கள்-நிமல் சிறி­பால டி. சில்வா

பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னை­யின்றி சட்டம் மற்றும் சமா­தானம் தொடர்­பான அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­ தன்னிச்சையாக பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்றம் செய்­து­வ­ரு­கிறார். எனவே, அவ­ரிடம் இருந்து பொலிஸ் துறையை மீளப்­பெ­று­மாறு ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்­து­கின்றோம் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார். கிறிஸ்­தவ விவ­காரம் மற்றும், அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சைக் கொடுத்­து­விட்டு பொலிஸ்­து­றையை மீளப்­பெ­று­மாறு மீளப்­பெ­று­மாறு கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர்…

Read More

நீர்கொழும்பு – வத்தளை பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் எங்கே?

இக்பால் அலி நீர்கொழும்பு மற்றும் வத்தளை நகர பகுதியில் பலகைக் கொட்டில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் மக்களுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்துத் தருமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த மக்களுடைய வீடற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து போராட்ட முன்னெடுப்புக்களை மேற் கொள்ளப் போவதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தடை செயய்யப்பட்ட சுனாமி எல்லைப்…

Read More