Headlines

90களில் இருந்து பிசினஸ் செய்து வந்தவர் சிக்கினான்.. நீர்கொழும்பில் 400 இலட்சம் ரூபா ஹெரோயினுடன் சிக்கிய தந்தையும் மகனும்

ஐந்து கிலோகிராம் ஹெரோய்னுடன் பிரபல ​போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் சந்தேகநபரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சில தினங்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பிரதிபலனாக நேற்று (10) இந்த ​போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியில் தங்க நகை விற்பனை நிலையமொன்றிற்குள் இருந்​து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ​போது…

Read More

இலங்கையில் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் புகைத்தலை தடை செய்யவும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஊர்களில், முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தல் உற்பத்திப்பொருட்களையும் அதன் விற்பனையையும் நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றுமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி நகரசபை மேற்கொண்ட நடவடிக்கை போல ஏன் மற்றைய ஊர்களிலும் மேற்கொள்ள முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கும் இப்படையணி உள்ளுராட்சி சபைகளுக்கு தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் அதனை விற்கக்கூடாது என்ற சட்டத்தினை நிறைவேற்ற முடியும் ஆனால் பெரும்பாலான சபைகளின் தலைவர்களே இப்பழக்கத்திற்கு…

Read More

பெரும்பான்மை இன சிறுவனின் செவிப்புலனுக்கு உதவிய முஸ்லிம்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஐ.டி.என் செய்தி

அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி கொழும்பு கடற்கடை பிரதேசத்தில் வைத்து களவாடப்பட்டது. இது குறித்த செய்தியை ஐ.ரி.என், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதை பார்த்த முன்னாள் ஐ.ரி.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான இக்கருவியை அச்சிறுவனுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்ததுடன் நேற்று (11) ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில்…

Read More

புலிக் கொடிகளுடன் தம்மை எதிர்த்தவர்களை நோக்கி, கையசைத்த ஜனாதிபதி மைத்திரி

(பட உதவி – ஜனாதிபதி ஊடகப் பிரிவு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில் காணலாம்.

Read More

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம்: இலண்டனில் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இலண்டனில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “வறுமையை ஒழித்து சுபீட்சம் மிகு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை களையப்படும். பயம்,…

Read More

அமைச்சர் றிஷாத் பிர­தமர் மோடியுடன் சந்திப்பு

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோக­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வரு­கின்­றமை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில்…

Read More

மொத்த சனத்தொகையில் நான்கு சதவீத இலங்கையர்களை கொண்ட கட்டார் நாட்டிற்கு Free visa வில் வருபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Safwan Basheer கடாரின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதம் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் free visa வில் கட்டாருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். Qatar Free Visa என்பது இதுதான். அந்த வீசாவில் மூன்றுமாதம் கடாரில் சட்டபூர்வமாக வாழமுடியும். அந்த மூன்று மாத காலத்துக்குள் ஒரு  நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு அந்த நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். கடாரின் அதிகமான நிறுவனங்கள் இரண்டு அல்லது, ஐந்து வருடத்துக்கு ஒரு தொழிலாளியோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. கடார் தொழில்…

Read More

பிலிப்பைன்ஸ் இளவரசி மாரியா YMMA தலைமையகத்தில்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி மாரியா ஆமோர் பல தலைவர்கள்,அமைப்புக்களுடனான சந்திப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று சரத் போன்சேக்கா,அமைச்சர் ரோசிசேனாநாயக்க இவர்களை சந்தித்ததோடு ACYMMA தலைமையகத்திற்கு விஜயம் செய்து YMMA YWMA உத்தியோகத்தர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கோண்டார்.

Read More

யாழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பார்வை -நூல் வெளியீடு

அஸ்ரப் ஏ சமத் வெளியீட்டு வைபவத்திற்கு வருகை தந்திருந்த 457 பேருக்கும் இந் நூல் முற்றாக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. யாழ் முஸ்லீம்களது கல்வி, பண்பாடு இலக்கிய பங்களிப்பு தொழில் அரசியல் அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள். இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழும் நிலை, மீளவும் யாழ் செல்ல முடியுமா? என்னும்; ஏக்கம். 21ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால யர்ப்பாணத்து முஸ்லீம்களின் நிலை முதலானவை தொடாபான வரலாற்றுப் பார்வையை இன்றுள்ள யாழ் முஸ்லீம்களும் எதிர்கால சந்ததியினரும்…

Read More

மஹிந்தவுக்கு முற்றிலும் மாறான விதத்தில் சிறிசேன – டேவிட் கேமரூன்

அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது. அதேபோன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவை நேற்றுச் சந்தித்த பிரிட்டனின் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளசெய்தியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கு 2013 இல் பயணம் செய்த தருணத்திலிருந்து…

Read More

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம்

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து விளக்குகிறது. 1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணு ஆயுதங்கள் பிறகு 10…

Read More

ரஞ்சன் ராமநாயக்க, விமல் வீரவன்சவுக்கு சவால்!

கால்நடை அபிவிருத்தித்துறை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். இது தொடர்பான அழைப்பை அவர் தமது முகநூலில் பிரசுரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றால்; தூக்கிட்டு கொல்வதாக தாம் சவால் விடுத்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றமையால் தாம் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்றும் விமல் வீரவன்ச கூறி வருவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் ஒருபோதும்…

Read More